உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

59

எ-டு: அன்னது, அற்று (அன்+து);கண்ணது, கட்டு (கண் +து); தன்மையது, தன்மைத்து; தாளது, தாட்டு (தாள்+து); பாலது, பாற்று (பால்+து).

ஒப்புவி, தப்புவி என்னும் பிறவினைகள், முறையே, ஒப்பி, தப்பி என மருவி வழங்கும். உடுத்து, தோற்று என்னும் பிறவினைகள் இன்று தன்வினைகளாகவும் வழங்குகின்றன.

ண், ர், ல், ழ், ள், ன் என்ற மெய்யீற்று வினைப்பகுதிகள், புடை பெயர்ச்சியில், நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உகரச்சாரியை பெற்றும் பெறாதும் வரும்; வழக்கறிந்து கடைப்பிடிக்க.

எ-டு: நி. காலம்

உண்ணுகிறான், உண்கிறான் சோருகிறான், சோர்கிறான் சொல்லுகிறான், சொல்கிறான் அமிழுகிறான், அமிழ்கிறான் கொள்ளுகிறான், கொள்கிறான்

தின்னுகிறான், தின்கிறான்

எ. காலம்

உண்ணுவான், உண்பான் சோருவான், சோர்வான் சொல்லுவான், சொல்வான்

அமிழுவான், அமிழ்வான் கொள்ளுவான், கொள்வான் தின்னுவான், தின்பான்

ஒருமை யேவலினும்

எ-டு: சொல், சொல்லு

இங்குக் கூறப்பட்டவற்றுள், ரகரமெய் யொழிந்த ஈற்றை யுடைய

வினைமுதனிலைகள்

இருநிலைப்படும்.

ங்ஙனமே

iv. பெயரெச்சம்

உடன்பாடு - ஆன, ஆகிய, ஆய; போந்த, போதிய, போது மான; போன, போகிய, போய, போந்த.

எதிர்மறை

செய்யவொண்ணாத,

செய்யொண்ணா, செய்யொணா.

V. வினையெச்சம்

செய்யவொண்ணா,

ஆய், ஆக (எ-டு: விரைவாய், விரைவாக); ஆய், ஆகி; இருக்க, இருப்ப; உடுத்து, உடுத்தி; என்று, என;செய்ய, செய; செய்யின், செயின்; தூய், தூவி; வர, வரற்கு, வருதற்கு, வருவதற்கு; வரின், வந்தால், வந்தக்கால்.

ககரவீற்று நிகழ்கால வினையெச்சங்களைப் பகரவீறாக எழுதுவது இலக்கிய நடையாகும்.

-

டு : இறக்க இறப்ப, விழிக்க விழிப்ப