உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

கட்டுரை வரைவியல்

நிற்கும்.

சில வினைகள் எதிர்மறையில் வலிமிக்கும் மிகாதும் இரு வடிவாய்

எ டு : பெ.எ. இராத இருக்காத

வி.எ.

வி.மு.(ஒன்றன்பால்)

இராமல் இருக்காமல்

இராது

இருக்காது

vi. இடைச்சொல்

But - ஆயின், ஆனால், either... or - ஆவது, ஆகிலும், ஆயினும், ஆனாலும், ஆதல், ஆக, எனினும், ஏனும்.

‘ஆவது’, ‘ஆகிலும்' முதலிய மறுநிலை யிணைப்புச் சொற்கள் (Alternative Conjunctions) மறுநிலைப்பட்ட ஒவ்வொரு சொல் லோடும் அல்லது சொற்றொடரோடும் சேர்ந்துவரும்.

-

டு: நானாவது அவனாவது,

மருதன் வந்தானேனும் முருகன் வந்தானேனும்.

16. சொன்மயக்கம் (Confusion of Words)

பின்வருஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்குதல் கூடாது.

-

அதிகம் அளவைக் குறிப்பது

அநேகம் (வ.) - எண்ணைக் குறிப்பது.

அதிக - பெயரெச்சம்,

அதிகம் - பெயரும் வினையெச்சமும்.

அரிவாள் - அறுவாள்.

பொருள்களைச் சிறியதா யரியும் வாள் அரிவாள் (அரிவாள் மணை). பொருள்களை அறுக்கும் வாள் அறுவாள் (வெட்டறுவாள்).

அரைப்படித்தவன் - குறைவாகக் கற்றவன்; அறப்படித்தவன் - முற்றக் கற்றவன்.

அல்ல : இல்லை.

ஒன்று இன்னொன்றல்லாமையை அன்று அல்ல என்னுஞ் சொற் குறிக்கும்; ஒன்று ஓரிடத்தி லின்மையை இல்லை என்னுஞ் சொற் குறிக்கும்.