உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

எ-டு:

அவை மரம் அல்ல - They are not trees.

அழகன் இங்கே இல்லை Alagan is not here.

-

அவன் அரங்கனில்லை என்பது வழு.

அவசரம் (வ.) - urgency; அவசியம் (வ.) - necessity.

அளி (ஏ.) - to present; கொடு (ஏ.) - to give.

அறிவிப்பு - notice, அறிக்கை -report.

61

ஊர்கோலம் - ஊரை வலமாகச் சுற்றாமல் ஊர்ந்து செல்லல். ஊர்தல் - வாகனத்திற் செல்லல், பையச் செல்லல்.

ஊர்வலம் - ஊரை வலமாகச் சுற்றுதல்.

எத்தனை - எண்குறிப்பது; எவ்வளவு - அளவு குறிப்பது; எத்துணை இரண்டுங் குறிப்பது.

ஒவ்வொரு each,

-

இடையிடையொரு; ஒரோ ஒரு

இடையிடையொரு; ஒரேயொரு - only one.

கட்டடம் (தொ.பெ.) binding, setting, building, construction;

கட்டிடம் (இடப்பெயர்) a site.

குமரன் - இளைஞன், வீரன்; குமாரன் (வ.) - மகன்.

குமரி - இளையள், வீரி; குமாரி (வ.) - மகள்.

குற்றஞ்சாட்டு – to accuse; குற்றஞ்சாற்று - to tell the crime.

முகம் வழி (பிறன் பொருட்டு); முகம் வழித்துக் கொள். (தற்பொருட்டு). கொள்- Reflexive sign.

சிறப்பு - excellence, peculiarity; விதப்பு - speciality.

தகப்பனார் ஒருமை (உயர்வுப்பன்மை); தகப்பன்மார் - பன்மை. தாழ்மை - humility; தாழ்வு இழிவு, கீழ்மை.

தீஞ்சுவை - இனிய சுவை; தீச்சுவை - தீய சுவை.

தேன் + சுவை - தேஞ்சுவை, தீஞ்சுவை, தீ (தீமை) + சுவை - தீச்சுவை.

இத்தகைய தொடர்களில் மெலிதோன்றுமிடத்து இனிமைப் பொருள்; வலிதோன்றுமிடத்துத் தீமைப்பொருள்.