உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

குறிப்பு : வீட்டு விலங்குகட்கும் பறவைகட்கும், சிறப்பாக விலங்குகட்கு, அன்புபற்றி மக்கட் பெயர்களை இடுவது வழக்கம். ஆணுக்கு ஆடவன் பெயரும், பெண்ணுக்குப் பெண்டின் பெயரும், இடப்படும். இங்ஙனம் இடப்பட்ட இயற்பெயர்களும் விரவுப்பெயராம்.

பால்பகா அஃறிணைப்பெயர் முடிபு

து என்னும் ஒன்றன்பால் விகுதியும் அ, வை என்னும் பலவின் பால் விகுதிகளும் பெறாத அஃறிணைப் பெயர்களெல்லாம், ஒருமை பன்மை ஆகிய இருமைக்கும் பொதுவாம். அவற்றை ஒருமையாகவும் பன்மையாகவும் ஆளலாம். அவற்றின் எண்ணை, அவற்றின் பயனிலைகள் அல்லது எண்ணுப் பெயரெச்சங்கள் காட்டும். இத்தகைய பெயர்கள் பால்பகா அஃறிணைப்பெயர் எனப்படும்.

எ-டு :

ஒருமை

மரம் வளர்கின்றது. குதிரை ஓடுகின்றது.

ஒருகாய் வாங்கினேன்.

பன்மை

மரம் வளர்கின்றன.

குதிரை ஓடுகின்றன.

நூறுகாய் வாங்கினேன்.

குறிப்பு : சில கூட்டுச் சொற்களிலும் தொடர்களிலும், உயர்திணைப் பெயர்கள் வடிவில் ஒருமையாயிருப்பினும் பொருளிற் பன்மையாகும். அவை வகுப்பொருமைப் பெயர் எனப்படும்.

எ-டு :

பத்துப்பிள்ளைக்காரி.

நூறாள் வேலை.

பெற்ற தாயைப் பேணாத மூடர்.

மதியிலியும்

பிறவியாகும்.

எச்சப் பிறவிப்பெயர் முடிபு

உறுப்பிலியுமாகிய மக்கட்பிறப்பு எச்சப்

மதிப்புலனற்ற பிறவியைக் குறிக்கும் மருள் என்னும் பெயரும், உறுப்புக்குறையைக் குறிக்கும் கூன் குருடு முதலிய பெயர்களும், ஆண்பால் விகுதியும் பெண்பால் விகுதியும் கொள்ளாக்கால், அஃறிணை முடிபுகொள்ளும்.