உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

எ-டு :

ஒருமை

மருள் வருகின்றது.

பன்மை

மருள்கள் வருகின்றன.

ஊமை வருகிறது.

ஊமைகள் வருகின்றன.

கூன் வருகிறது.

கூன்கள் வருகின்றன.

குறள் வருகிறது.

குறள்கள் வருகின்றன.

குருடு வருகிறது.

குருடுகள் வருகின்றன.

செவிடுகள் வருகின்றன.

89

செவிடு வருகிறது.

இப் பெயர்கள் ஆண்பால் விகுதியும் பெண்பால் விகுதியும் பலர்பால் விகுதியும் பெறின், அவ்வப் பால் வினைகொண்டு முடியும்.

எ-டு :

ஊமையன் வருகின்றான்.

-

ஆண்பால்

செவிடன் வருகின்றான்.

ஊமைச்சி வருகின்றாள்.

- பெண்பால்

செவிடி வருகின்றாள்.

ஊமையர் வருகின்றார்.

பலர்பால்

செவிடர் வருகின்றார்.

பேதை, மக்கு, மண்டு முதலிய பெயர்கள் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாம்.

எ-டு :

இவன் பேதை,

பேதை வந்தான் – ஆண்பால்

இவள் பேதை,

பேதை வந்தாள்

பேதை வந்தாள் – பெண்பால்

இவன் மண்டு,

மண்டு வந்தான் – ஆண்பால்

இவள் மண்டு,

மண்டு வந்தாள்

பெண்பால்

பேதை, நல்லதைத் தீயதென்றும் தீயதை நல்லதென்றும் பிறழக் கருதும் ஆடவன் அல்லது பெண்டு.

முதுமைப்பெயர் முடிபு

முதுமைப் பெயர்களும், உறுப்புக்குறைப் பெயர்கள் போன்று உயர்திணை விகுதி பெற்றக்கால் உயர்திணை முடிபும், அவ் விகுதி பெறாக்கால் அஃறிணை முடிபும், பெறும்.

எ-டு :

கிழவன் செல்கின்றான் கிழவி செல்கின்றாள்

ஆண்பால்

பெண்பால்

கிழவர் செல்கின்றார்

-

பலர்பால்