உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

ஒருமை

கிழம் செல்கின்றது.

கிழடு செல்கின்றது.

பன்மை

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கிழங்கள் செல்கின்றன.

கிழடுகள் செல்கின்றன.

குறிப்பு : ஊமை, குருடு, கிழம், கிழடு முதலிய வடிவுகள் இகழ்ச்சி பற்றியவையாதலின், திருந்திய நடையில் விலக்கப்படல் வேண்டும்.

இகர விகுதியேற்ற ஒருமைப்பெயர் முடிபு

பெண்பால் விகுதியல்லாத இகர வீற்றை யேற்ற பெயர்கள், சிலவிடத்து உயர்திணை யொருமைப் பால்கள் இரண்டிற்கும், சிலவிடத்து இருதி ருதிணை ணை யொருமைப் பால்கள் மூன்றிற்கும், பொதுவாம்.

-டு : வழிகாட்டி வந்தான், வந்தாள்

கற்றுச் சொல்லி வந்தான், வந்தாள்

கண்ணிலி வந்தான், வந்தாள், வந்தது. சேர்ந்தாரைக்கொல்லி வந்தான்,

வந்தாள், வந்தது.

பேர், பேர்வழி என்னும் பெயர் முடிபு

பேர் என்னும் பெயர் ஆண்பாற்கும்

-உயர்திணை

– இருதிணை

பெண்பாற்கும்

பொதுவாம்; ஒருமையில் வராது; 'கள்' விகுதி பெற்றும் பெறாது

பன்மையிலேயே வரும்.

எ-டு :

இரண்டு பேர் வந்தார்கள்.

எத்தனை பேர் வந்தார்கள்?

நூறு பேர்கள் வந்தார்கள்.

எத்தனை பேர்கள் வந்தார்கள்?

இவற்றுள், விகுதி பெறாத வடிவே இயல்பாம்.

எ-டு :

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன்.

பேர்வழி என்னும் பெயரும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாம்; ஆனால் ஒருமையிலும் வரும்; பன்மையில் விகுதி பெற்றே வரும்.

எ-டு : ஒரு பேர்வழி வருகிறான்.

பத்துப் பேர்வழிகள் வருகிறார்கள்.

குறிப்பு : பேர்வழி என்னும் சொல் உயர்வழக்கிற் குரியதன்று.