உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : அரசு ஆண்டது, வேந்து வென்றது.

தூது சென்றது, விருந்து வந்தது.

இப் பெயர்கள், பன்மையில் விகுதி பெற்றும் பெறாதும் வரும்.

எ-டு : அரசு ஆண்டன, அரசுகள் ஆண்டன.

விருந்து வந்தன, விருந்துகள் வந்தன.

வை, உயர்திணை விகுதிபெறின் உயர்திணை

கொண்டே முடியும்.

எ-டு : அரசன் ஆண்டான், தூதன் சென்றான்,

விருந்தினன் உண்டான்

வினை

அரசி ஆண்டாள், தூதி சென்றாள்,

விருந்தினள் உண்டாள்

அரசர் ஆண்டார், தூதர் சென்றார்,

ஆண்பால்

பெண்பால்

பலர்பால்

விருந்தினர் உண்டார்

உயர்திணை வடிவுகொண்ட அஃறிணைப் பெயர் முடிபு

வடிவி

அலவன்,இடவன் வலவன் கடுவன் கத்தரிப்பான் சுணங்கன் சுடுகாடுமீட்டான் முதலிய பெயர்கள், உயர்திணை லிருப்பினும் அஃறிணையைக் குறித்தலால் அஃறிணை வினை கொண்டே முடியும் .

-

அலவன் - ஆண் நண்டு. இடவன் - இடப்புறக் காளை. வலவன் வலப்புறக் காளை. கடுவன் ஆண்குரங்கு. கத்தரிப்பான் கத்தரிக்கோல். சுணங்கன் - நாய். சுடுகாடுமீட்டான் - முடக் கொற்றான் கொடி.

எ-டு : இடவன் நன்றாய்ப் போகிறது.

கத்தரிப்பான் நன்றாய்க் கத்தரிக்கிறது.

திணைபாலிடப் பொதுவினை முற்றுகள்

வியங்கோள் வினையும், வேறு இல்லை உண்டு என்னும் குறிப்பு வினைமுற்றுகளும், இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம்.

தன்மை: யான், யாம், நாம்

படர்க்கை: அவன், அவள்,அவர்,

முன்னிலை: நீ, நீம், நீர்

அது, அவை

வாழ்க

வேறு

இல்லை

உண்டு