உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

93

செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, படர்க்கையில் பலர்பாலொழிந்த நாற்பாற்கும் பொதுவாம்; தன்மையிலும் முன்னிலையிலும் இக்காலத்து வராது.

ஏற்கும்.

அவன், முருகன் அவள், வள்ளி

அது, மாடு

அவை, மாடுகள்

வரும்

குறிப்பு : இவ் வினைமுற்றை உயர்திணையில் ஆள்வது இலக்கிய நடைக்கே

குலப்பெயர் முடிபு

ஒருவனது குலம் ஆண்பால் பலர்பால் பண்புப்பெயர் ஆகிய மூவடிவிற் குறிக்கப் பெறலாம்.

எ-டு : இவன் குலம் வேளாளன், பார்ப்பான்.

இவன் குலம் வேளாளர், பார்ப்பார்.

இவன் குலம் வேளாண், பார்ப்பு.

குறிப்பு : பலர்பாலிற் குறிப்பது அத்துணைச் சிறப்புடைய தன்று.

ஒரு குலத்தார் பெயர்கள், அவற்றின் விகுதிக்கேற்ப உயர்திணை முடிபு கொள்ளும்.

எ-டு: வேளாளன் வந்தான் - ஆண்பால்

வேளாட்டி வந்தாள் - பெண்பால்

வேளாளர் வந்தார் - பலர்பால்

இருதிணை யெழுவாய்களின் கூட்டு முடிபு

உயர்திணை எழுவாயும் அஃறிணை யெழுவாயும் கலந்து ஒரு முடிபு கொள்ளும்போது, பொதுவாய் உயர்திணை வினைகொண்டு முடியும்.

எ-டு : நம்பியும் நாயும் வந்தனர்.

இருதிணை எழுவாய்களும் கலந்துவரும்போது உயர்திணை யெழுவாய் இழிவுபற்றியதாயின், இரண்டும் ஒருங்கே அஃறிணை வினைகொண்டு முடியும்.

எ-டு : பேதையும் நாயும் வந்தன.

குறடும் பேதையும் கொண்டது விடா.