உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இருதிணைக்குமுரிய பல பெயர்கள் விரவிவரின் மிகுதி (பெரும்பான்மை) பற்றி ஒரு திணை வினைகொண்டு முடியும். அதாவது, உயர்திணை மிகுந்திருப்பின் மிகுந்திருப்பின் உயர்திணை வினை கொண்டும், அஃறிணை மிகுந்திருப்பின் அஃறிணை கொண்டும் முடியும்.

வினை

எ-டு : அரசன் ஆசிரியன் உழவன் ஆ (பசு) ஆகிய நால்வரும் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவர். (உயர்திணை மிகுதி)

பெற்றோரும் தாய்மொழியும் தாய்நாடும் பேணப்படத் தக்கவை. (அஃறிணை மிகுதி)

முதல் என்று முடியும் தொகுதிப்பெயர் முடிபு

ஆதி அல்லது முதல் என்று முடியும் தொகுதிப் பெயர்கள், அவற்றுள் அடங்கிய பலவற்றையும் வகுத்துச் சுட்டின் பன்மை வினை கொண்டும், தொகுத்துச் சுட்டின் ஒருமை வினை கொண்டும் முடியும்.

எ-டு : கரிமுதல் பொருதன. (பன்மை வினை)

ஏலாதி உடம்பிற்கு நல்லது. (ஒருமை வினை)

கரிமுதல் - கரி முதலிய நாற்படைகள் (கரி, பரி, தேர், கால் கரி - யானை. பரி - குதிரை. ஏலாதி -ஏலம் சுக்கு மிளகு முதலிய ஆறு சரக்குகள் சேர்ந்த கலவை மருந்து.

வேறு வினைப்பெயர்களின் கூட்டு முடிபு

வெவ்வேறு சிறப்பு வினைக்குரிய பல பொருட்பெயர்கள், தனித்தனியாகவேனும் தொகுதியாகவேனும் கூறப்பட்டு ஒருவினை கொண்டு முடியின், அவற்றின் பொதுவினை கொண்டு முடியும்.

எ-டு : சோறும் கறியும் பாலும் தேனும் உண்ணப்பட்டன.

நால்வகை யுண்டியும்.

நால்வகை யுண்டிகள், உண்பது தின்பது நக்குவது பருகுவது என்பன. சோறு உண்பது; கறி தின்பது; தேன் நக்குவது; பால் பருகுவது.

வெவ்வேறு சிறப்புவினை கொண்டு முடியும் பல எழுவாய்கள் ஒன்றுசேர்ந்து பொதுவினை கொண்டு முடியின், ஒவ்வோர் எழுவாயும் தனித்தனி அப்பொது வினைக்கு ஏற்றதாயிருத்தல் வேண்டும்.

எ-டு : விளையாட்டும் உடற்பயிற்சியும் நிகழ்ந்தன.