உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

95

வ்வாறன்றி, விளையாட்டும் உடற்பயிற்சியும் செய்யப் பட்டன எனக் கூறின், விளையாட்டு என்னும் எழுவாய்க்குச் செய்யப்பட்டது என்னும் வினை ஏற்காமை காண்க.

ஒருபொருட் பலபெயர் முடிபு

ஒருவரைப் பல பெயராற் பாராட்டிப் பெயர்தொறும் வினை கொடுப்பின், ஒரே வினைகொடுத்துக் கூறவேண்டும்.

எ-டு : ஐய! வருக, அண்ணால்! வருக, அறிஞ! வருக.

இங்ஙனமன்றி, ஐய வருக! வருக அண்ணால்! அமர்க, அறிஞ!

செல்க, எனப் பெயர்தொறும் வேறு வினை கொடுப்பின், எழுவாய் வேறுபடல் காண்க.

உம்மைத்தொகை தொடர் முடிபு

உம்மைத் தொகையான உயர்திணைப் பெயர்கள், இறுதியிற் பலர்பால் விகுதி பெற்றுப் பலர்பால் வினைகொண்டு முடியும்.

எ-டு : கபிலபரணர் பாடினர்.

சேரசோழபாண்டியர் ஆண்டனர்.

உம்மைத் தொகையான முறைப்பெயர்கள் இறுதியிற் பலர்பால் விகுதி பெற்றும் பெறாதும் பலர்பால் வினைகொண்டு முடியும்.

எ-டு : தாய்தந்தையர் வந்தனர்.

தாய் தந்தை வந்தனர்.

உம்மைத் தொகையான அஃறிணைப் பெயர்கள், இறுதியிற் பலவின்பால் விகுதி பெற்றும்

வினைகொண்டு முடியும்.

பெறாதும் பலவின்பால்

எ-டு : இராப் பகல்கள் மாறிமாறி வருகின்றன.

இராப் பகல் மாறிமாறி வருகின்றன.

ஒன்றாகக் கலந்த இரு பொருட்பெயர்கள், அல்லது, ஒரே பொருள் குறித்த இருபெயர்கள், ஒருமை வினைகொண்டு முடியும்.

எ-டு : அவனுக்குத் தயிரும் சோறும் கிடைத்தது.

உனக்கு மானம் ஈனம் இருக்கிறதா?

வினா முடிபு

யார் என்னும் வினாப்பெயர் உயர்திணை முப்பாற்கும் பொதுவாம்.