உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

எ-டு : அவன்

அவள்

யார்?

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அவர்

என் என்னை எவன் என்னும் வினாப்பெயர்கள், அஃறிணை யிருபாற்கும் பொதுவாம்.

அது அவை

என்? என்னை? எவன்?

குறிப்பு : உயர்திணையைச் சேர்ந்த எவன் என்னும் வினாப்பெயரும், அஃறிணையைச் சேர்ந்த எவன் என்னும் வினாப்பெயரும், வெவ்வேறு.

என் என்னும் வினாச்சொல், ஒருமையில் என்னது என்றும் பன்மையில் என்ன என்றும் இருக்கும். என்ன என்னும் சொல் ஒருமையில் வழங்குவது வழுவமைதி.

ஒரு பொருளின் திணையைப்பற்றிய ஐயவினாவை, உரு உருவு உருவம் என்னும் சொற்களுள் ஒன்றைக்கொண்டு முடித்தல் வேண்டும்.

எ-டு : மாந்தனா மரமா அவ் வுருவம்?

ஐயப்பட்ட பொருள் மாந்தனாயின்,

அவ் வுருவம் மரமன்று, மாந்தன் என்றாவது,

அவன் மரமல்லன், மாந்தன் என்றாவது, முடித்தல் வேண்டும்.

ஐயப்பட்ட பொருள் மரமாயின்,

அவ் வுருவம் மாந்தனன்று, மரம்,

என்றாவது,

அது மாந்தனன்று, மரம்.,

என்றாவது முடித்தல் வேண்டும்.

திணை தெரிந்து பால் தெரியாத பொருள்களையும் திணை தெரிந்து எண் தெரியாத பொருள்களையும்பற்றிய ஐயவினாவை, பன்மைச் சொல்லால் முடித்தல் வேண்டும்.

எ-டு : ஆடவனா பெண்டா அங்குத் தோன்றுபவர்?

ஒருவரா பலரா இதைச் செய்தவர்?

பால் ஐயம்.

}

– எண் ஐயம்.

ஒன்றா பலவா இங்கு விழுந்தவை? பால் ஐயம் நீங்கியபின், உண்மைக் கேற்ப, அங்கு தோன்றுபவன் பெண்டல்லன் ஆடவன்.,

என்றாவது,