உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

அங்குத் தோன்றுபவள் ஆடவனல்லள், பெண்டு, என்றாவது, முடித்தல் வேண்டும்.

உயர்திணை எண் ஐயம் நீங்கியபின், உண்மைக்கேற்ப, இதைச் செய்தவர் பலரல்லர், ஒருவர்,

என்றாவது,

இதைச் செய்தவர் ஒருவரல்லர், பலர்,

என்றாவது, முடித்தல் வேண்டும்.

அஃறிணை எண் ஐயம் நீங்கியபின், உண்மைக்றேப,

இங்கு விழுந்தது பலவன்று, ஒன்று,

என்றாவது,

இங்கு விழுந்தவை ஒன்றல்ல, பல,

என்றாவது, முடித்தல் வேண்டும்.

97

அஃறிணைப் பால் ஐயவினாவைப் பால்பகா அஃறிணைப்

பெயரும் முடிக்கும்.

எ-டு : ஒன்றோ பலவோ அவன் கொண்ட புத்தகம்?

இவ் வினாவிற்கு விடை :

அவன் கொண்ட புத்தகம் பலவன்று, ஒன்று,

அல்லது,

அவன் கொண்ட புத்தகம் ஒன்றல்ல, பல,

என்பது.

இருதிணையிலும்,

ஆண்மை

வினாவைப் பொதுச் சொல்லும் முடிக்கும்.

எ-டு : ஆடவனா பெண்டா அவ் ஆள்?

பெண்மைபற்றிய

ஐய

உயர்திணையில் ஐயம்

காளையா ஆவா அம் மாடு? - அஃறிணையில் ஐயம்

இவ் வினாக்கட்கு விடைகள் :

(1) அவ் ஆள் பெண்டல்லன், ஆடவன்.

அல்லது,

அவ் ஆள் ஆடவனல்லள், பெண்டு.

(2) அம் மாடு ஆவன்று, காளை.

அல்லது,

அம் மாடு காளையன்று, ஆ.

சிறிதும் அறியப்படாத பொருளைப்பற்றி வினவும் வினா, யாது அல்லது எவன் என்னும் சொல்லைக்கொண்டு முடிதல் வேண்டும்.

எ-டு : இச் சொற்குப் பொருள் யாது?

இச் சொற்குப் பொருள் எவன்?