உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

சிறிது அறியப்பட்ட பொருளைப்பற்றி வினவும் வினா, எது என்னும் சொல்லைக்கொண்டு முடிதல்வேண்டும்.

எ-டு : இம் மரங்களுள் கருங்காலி எது?

கண்ணிற்கு மறைந்து நிற்பவரைப்பற்றி வினவும் வினா, யார் அவர்? என்றிருத்தல் வேண்டும். யார் அது? என்று வினவுவது வழுவாம்.

ச்

குறிப்பு : பொதுவாக, வினாச்சொற்களுள், யகரவடிச் சொற்கள் பொதுப்படையான பொருளைப்பற்றியும், எகரவடி சொற்கள் ஒரு குழுவைச் சேர்ந்த பொருளைப்பற்றியும் வினவும்.

எ-டு : பொதுப்படையான பொருள்;

யாவன்

யாவள்

ஒரு குழுவைச் சேர்ந்த பொருள் : ஏவன் - ஆண்பால்

எவள்

பெண்பால்

யாவர், யார்

எவர் பலர்பால்

யாது

யா, யாவை

எது, ஏது - ஒன்றன்பால்

எவை பலவின்பால்

ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த பொருள்களுள், ஒன்றையேனும் பலவற்றையேனும் திட்டமின்றி வினாச் சொல்லாற் குறிப்பின், ஏதேனும் (எதேனும்) ஒன்று, எவையேனும் இரண்டு, எனக் குறித்தல் வேண்டும். யாதேனும் ஒன்று, யாவேனும் இரண்டு, என்பன, ஒரு பரந்த வகுப்பிற்குரிய பொருளை அல்லது பொருள்களைக் குறிப்பனவாகும்.

11. கால முடிபு (Sequence of Tenses and Verbs)

வினைச்சொல் தனித்து வரினும் தொடர்ந்து வரினும், முன்பின் சொல்லொடு காலத்திற் பொருந்தவேண்டும்.

கால வகைகளும் அவற்றின் உட்பிரிவுகளும்

காலம், (1) இறந்த காலம் (2) நிகழ்காலம் (3) எதிர்காலம் என மூவகைப்படும். அவற்றுள், ஒவ்வொன்றும்,

(1) தனிப்பு (Indefinite)

(2) தொடர்ச்சி (Continuous)

(3) நிறைவு (Perfect)

(4) நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous) என நான்கு உட்பிரிவு கொள்ளும்.