உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

எ-டு :

இறந்தகாலப் பிரிவுகள் :

(1) நான் எழுதினேன்

(2) நான் எழுதிக்கொண்டிருந்தேன் (3) நான் எழுதியிருந்தேன்

(4) (நான் எழுதிக்கொண்டிருந்திருந்தேன்)

நிகழ்காலப் பிரிவுகள்:

(1) நான் எழுதுகிறேன்

(2) நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்

(3) நான் எழுதியிருக்கிறேன்

தனிப்பு - தொடர்ச்சி

நிறைவு

-

நிறைவுத்

தொடர்ச்சி

-தனிப்பு - தொடர்ச்சி நிறைவு

(4) நான் எழுதிக்கொண்டிருந்திருக்கிறேன் - நிறைவுத்

எதிர்காலப் பிரிவுகள்

(1) நான் எழுதுவேன்

(2) நான் எழுதிக்கொண்டிருப்பேன்

(3) நான் எழுதியிருப்பேன்

(4) நான் எழுதிக்கொண்டிருந்திருப்பேன்

-

தொடர்ச்சி

தனிப்பு தொடர்ச்சி நிறைவு

நிறைவுத்

தொடர்ச்சி

இங்ஙனமே, ஏனை யிடம் பால்களொடும் ஒட்டுக.

குறிப்பு :

99

(1) ஒரு காலப் பிரிவு நான்கனுள், தனிப்பைத் தனிக்காலம் என்றும், ஏனையவற்றைக் கலவைக்காலம் அல்லது கூட்டுக் காலம் என்றும், கூறலாம்.

(2) இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி இன்று வழக்கற்றது.

(3) எதிர்காலப் பிரிவுகளுள்:

தனிப்பு, இறந்தகால வழக்கவினையைக் கூறற்கும் ஏற்கும்.

எ-டு : நான் சிறுவனா யிருந்தபோது, கற்பலகையில்தான்

எழுதுவேன்.

நிறைவு, மறதியை அல்லது ஊகிப்பை அல்லது இழந்த வாய்ப்பை உணர்த்தும் இறந்தகால வினையைக் கூறற்கும் ஏற்கும். தனது வினையாயின் மறதிக்கும், பிறன் வினையாயின் ஊகிப்பிற்கும் இடமாம்; இழந்த வாய்ப்பு அவ் விரு வினைக்கும் பொதுவாம்.