உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தனது வினை

எ-டு : நான் இளமையில் அவரைப் பார்த்திருப்பேன். (மறதி)

அவன் வந்திருந்தால் நான் கொடுத்திருப்பேன். (இழந்த

வாய்ப்பு)

பிறன் வினை

வேலன் குடிவெறியில் உளறியிருப்பான். (ஊகிப்பு)

நீ கோபத்தில் ஒருவேளை அங்ஙனம் சொல்லியிருப்பாய். (ஊகிப்பு) நான் கேட்டிருந்தால் அவர் கொடுத்திருப்பார். (இழந்த வாய்ப்பு)

நிறைவுத் தொடர்ச்சி, எதிர்கால வடிவிலிருப்பினும், இறந்த காலத்தையும் குறிக்கும். அன்று, மறதியை அல்லது ஊகிப்பை உணர்த்தும். இழந்த வாய்ப்புக் கருத்தில் இக்காலப் பிரிவு வழங்காவிடினும், வழங்குதற்கு இடமுண்டு.

எ-டு : அவர் என் வீட்டிற்கு வந்தபோது, நான் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பேன். (மறதி)

நீ நேற்று மாலை 4 மணிக்குத் தூங்கிக் கொண்டிருந்திருப்பாய்.

(ஊகிப்பு)

ரு

மேற்காட்டிய காலப் பிரிவுகளுள் அடங்காத இரு கூட்டுக் காலங்கள் உண்டு. அவை,

(1) எழுதியிருந்திருக்கிறேன், (2) எழுதியிருந்திருப்பேன், என்பன. இவற்றை, ஏனையிடம் பால்களொடும் ஒட்டிக்கொள்க.

இவை, முறையே, நிகழ்கால வடிவிலும் எதிர்கால வடிவிலும் இருப்பினும், கருத்தில் இறந்த காலமாகும்; காலப் பிரிவில் நிறைவு ஆகும்.

இவற்றுள், முன்னது ஊகிப்பும் மறதியும்பற்றியும், பின்னது ஊகிப்பும் மறதியும் இழந்த வாய்ப்பும்பற்றியும் வரும். முற்கூறிய வாறே, மறதி தனது வினைக்கும் ஊகிப்பு பிறன் வினைக்கும் உரியனவாகும்.

எ-டு : நான்

(1)

கடைக்குப் போனபோது, அவனும் கூடவே

வந்திருக்கிறான். (ஊகிப்பு)

அந்தச் சுற்றறிக்கையில் நானும் கையெழுத்து வைத்திருந் திருக்கிறேன். (மறதி)