உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

"

குறிப்பு : 'செய' என்னும் வாய்பாட்டு எச்சவினை, விளக்கேற்ற மணியடித்தது, என்றாற் போன்ற வாக்கியங்களில் உடனிகழ்ச்சிப் பொருள் தருதல்பற்றியே, நிகழ்கால வினையெச்சம் எனப் பெயர்பெற்றது. மற்றப் பொருள்களி லெல்லாம், அது ஏனை யிரு காலத்தையே, சிறப்பாக எதிர்காலத்தையே காட்டுவதாகும்.

முக்கால வினையெச்சத்தின் காலப்பிரிவுகள்

இறந்தகாலப் பிரிவுகள்:

(1) எழுதி

(2) எழுதிக்கொண்டிருந்து (3) எழுதியிருந்து

(4) எழுதிக்கொண்டிருந்திருந்து

நிகழ்காலப் பிரிவுகள்

(1) எழுத

(2) எழுதிக்கொண்டிருக்க

(3) எழுதியிருக்க

(4) எழுதிக்கொண்டிருந்திருக்க

எதிர்காலப் பிரிவுகள்

T

தனிப்பு தொடர்ச்சி நிறைவு

நிறைவுத் தொடர்ச்சி

தனிப்பு

தொடர்ச்சி

நிறைவு

நிறைவுத் தொடர்ச்சி

(1) எழுதின்

(2) எழுதிக்கொண்டிருப்பின்

(3) எழுதியிருப்பின்

தனிப்பு

தொடர்ச்சி

நிறைவு

(4) எழுதிக்கொண்டிருந்திருப்பின் நிறைவுத் தொடர்ச்சி

குறிப்பு :

(1)

எழுதினால் என்பது பொது நடைக்கும், எழுதின் என்பது லக்கிய நடைக்கும், ஏற்ற வடிவங்களாகும்.

(2) இருப்பின் எனினும் இருக்கின் எனினும் ஒன்றே.

(3)

எதிர்கால வினைமுற்றின் நிறைவும் நிறைவுத் தொடர்ச்சி யும் போன்றே எதிர்கால வினையெச்சத்தின் நிறைவும் நிறைவுத் தொடர்ச்சியும், இறந்தகாலம்பற்றி வரும்.

-டு : நீ இதில் தலையிட்டிருப்பின், (உனக்குப் பெருந் தீங்கு விளைந்திருக்கும்) - நிறைவு

நீ இவர்களொடு முதலிலிருந்து கலந்துகொண்டிருந் திருப்பின், (நேர்மாறான விளைவு நிகழ்ந்திருக்கும்) நிறைவுத் தொடர்ச்சி.