உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

எதிர்காலப் பிரிவுகள்

(1) எழுதுவது

(2) எழுதிக்கொண்டிருப்பது

(3) எழுதியிருப்பது

(4) எழுதிக்கொண்டிருந்திருப்பது

தனிப்பு தொடர்ச்சி நிறைவு

நிறைவுத் தொடர்ச்சி

105

குறிப்பு : 'கை' விகுதித் தொழிற்பெயரும் 'தல்' விகுதித் தொழிற்பெயரும் முக்காலத்திற்கும் பொதுவான ஒரே நான்கு பிரிவுடையவா யிருக்க, ‘து’வ் விகுதித் தொழிற்பெயர் முக்காலத் திற்கும் வெவ்வேறு நந்நான்கு பிரிவுடையதா யிருத்தல் காண்க.

மேற்காட்டிய பல்வகை வினைச்சொற்களுக்கும் வினையடிச் சொற்களுக்கும் உரிய காலப்பிரிவுகளை, அவ்வக் காலத்திலும் ஏற்புடைய பிறகாலத்திலும் வழுவாது வழங்குதல் வேண்டும்.

தொழிற்பெயர் முடிபு

வினைநிகழ்ச்சி குறிக்கும் தொழிற்பெயர்கள் 7ஆம் வேற்றுமை யுருபேற்ற நிலையில், முக்காலத் தொடர்ச்சியையும் உணர்த்தலாம். எ-டு : தியாகராச பாகவதர் பாடுகையில் மிக அமைதியாக விருந்தது - இறந்தகாலத் தொடர்ச்சி

நீ பாடுகையில், நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் நிகழ்காலத் தொடர்ச்சி

-

அவன் பாடுகையில், எல்லாரும் தூங்கிக் கொண்டிருப் பார்கள் எதிர்காலத் தொடர்ச்சி

பெயரெச்ச முடிபு

காலப்பெயரைத் தழுவிநிற்கும் முக்காலப் பெயரெச்சங்களும், தத்தங் காலவினைகளைக் கொண்டே முடிதல் வேண்டும்.

எ-டு :

போனபோது கொடுத்தான்

போகிறபோது கொடுக்கிறான்

போகும்போது கொடுப்பான்

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

நான் இங்கிலாந்திற் படித்தபோது, போர் நடந்து கொண்டிருந்தது

- இறந்த காலம்.

நான் விளையாடுகிறபோது மழை பெய்து கொண்டிருக்கிறது

- நிகழ் காலம்.