உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

நான் தூங்கும்போது அவர்களெல்லாரும் சீட்டாடிக் கொண்டிருப்பார்கள் - எதிர்காலம்.

இவ்வாறன்றி, வேறு காலவினையொடு முடிவதெல்லாம்

வழுவாம்.

பிழை

திருத்தம்

(1) போம்போது கொடுத்தான்.

(2) நான் படிக்கும்போது, கன்னையா நாயுடு குழும்பு (Company) நாடகம் நடித்துக்கொண்டிருந்தது.

(3) நான் படிக்கிறபோது, வானொலியைப்பற்றிக் கேள்விப்பட்டதே யில்லை.

(4) நான் படிக்கும்போது, நீ ஏன் கூடப் படிக்கிறாய்?

(1) போம்போது கொடுப்பான்;

(அல்லது)

போனபோது கொடுத்தான்.

(2) நான் படித்தபோது, கன்னையா நாயுடு குழும்பு நாடகம் நடித்துக்கொண்டிருந்தது.

(3) நான் படித்தபோது, வானொலியைப்பற்றிக் கேள்விப் பட்டதே யில்லை.

(4) நான் படிக்கிறபோது, நீ ஏன் கூடப் படிக்கிறாய்?

எதிர்காலப் பெயரெச்சம் இறந்தகால வழக்க வினையைக் குறிக்குமாயின், அதன்பின் வரும் வினைமுற்றும் எதிர்காலத்தி லிருத்தல்வேண்டும்.

எ-டு : நான் முன்பு இங்கு விளையாடும்போது, வேறு சில பிள்ளைகளும் வந்து விளையாடுவார்கள்.

இறந்தகாலப் பெயரெச்சம் பின்மைச் சொல்லையும், திர்காலப் பெயரெச்சம் முன்மைச் சொல்லையும் தழுவும். நிகழ்காலப் பெயரெச்சமும் எதிர்மறைப் பெயரெச்சமும், இவற்றுள் ஒன்றையும் தழுவா.

எ-டு : வந்த பின், பின்பு, பின்னர், பிறகு

வரு முன், முன்பு, முன்னர், முன்னம்

வராதமுன் என்பது வழுவமைதியாம்.