உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

107

வினையாலணையும் பெயர் முடிபு

வினையாலணையும் பெயர்கள் விளைவு குறித்த வினை களொடு முடியின், இறந்தகால வினையாலணையும் பெயர்கள் முக்கால வினைகளொடும், நிகழ்கால எதிர்கால வினையாலணை யும் பெயர்கள் எதிர்கால வினையொடும் முடியும்.

எ-டு : பந்தயத்தில் முந்திவந்தவன் பரிசு பெற்றான், பெறுகிறான், பெறுவான்.

பந்தயத்தில் முந்தி வருகிறவன் பரிசு பெறுவான்.

பந்தயத்தில் முந்தி வருபவன் பரிசு பெறுவான்.

நிகழ்கால வினையாலணையும் பெயர்: வழக்க வினையைக் குறிப்பின் நிகழ்கால வினைகொண்டும் முடியும்.

எ-டு : பாடுகிறவன் பரிசு பெறுகிறான்.

வினையெச்ச முடிபு

முக்கால வினையெச்சங்களும், முதலுக்கும் சினைக்கும் பொதுவான தன்வினை பிறிதின்வினை ஆகிய

முடியும்.

ரண்டொடும்

முதல் - உடம்பு, உறுப்புடைப் பொருள். சினை - உறுப்பு.

எ-டு :

இ.கா. வந்து போனான்

காலொடிந்து விழுந்தது

கந்தன் விழுந்து காலொடிந்தது மழை பெய்து பயிர்விளைந்தது காலொடிந்து விழுந்தான்

நி.கா. படிக்க விரும்பினான்

கண் சிவக்கக் கலங்கிற்று கண்ணன் சினக்கக் கண்சிவந்தது

காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது

விலாப்புடைக்க வுண்டான்

எ.கா. வரின் உண்பான்

கண்கலங்கினால் சிவக்கும்

குழந்தை நடப்பின் கால் நோகும்

ஆசிரியன் கற்பித்தால் மாணவன் கற்பான் கைதவறினால் விழுவான்

தன்வினை

தன்வினை

பிறிதின்வினை

பிறிதின்வினை

பிறிதின்வினை

தன்வினை தன்வினை

பிறிதின்வினை

பிறிதின்வினை

- பிறிதின்வினை

தன்வினை தன்வினை

பிறிதின்வினை

பிறிதின்வினை

பிறிதின்வினை