உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

முக்கால வினையெச்சங்களும் முதல்வினையாகிய தன் வினையொடு முடியும்போது, இறந்தகால வினையெச்சமும் நிகழ்கால வினையெச்சமும் முக்கால வினையொடும் முடியும்; எதிர்கால வினையெச்சம் பொதுவாக எதிர்கால வினையொடு மட்டும் முடியும். இவை வழாநிலையாம்.

எ-டு : வந்து போனான் வந்து போகிறான்

இ.கா.வி.

நி.கா.வி.

வந்து போவான்

-

எ.கா.வி.

வர விரும்பினான் இ.கா.வி.

நி.கா.வி.

-

எ.கா.வி.

எ.கா.வி.

வர விரும்புகிறான்

வர விரும்புவான்

வரின் உண்பான்

இறந்தகால வினையெச்சம், காரணம் முன்மை ஆகிய ருபொருள்பற்றி வரும்.

-டு : மழைபெய்து பயிர் விளைந்தது

வண்டிவந்து மழை தொடங்கிற்று

காரணம்

முன்மை

நிகழ்கால வினையெச்சம், காரணம் முன்மை உடனிகழ்ச்சி

நோக்கம் விளைவு ஆகிய ஐம்பொருள் பற்றிவரும்.

மழை பெய்யக் குளம் நிரம்பிற்று

காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது

சங்கூத மணி யடித்தது

பரிசுபெறப் பாடம் படித்தான்

கால் நோக வழிநடந்தான்

காரணம்

முன்மை

உடனிகழ்ச்சி

நோக்கம்

விளைவு

எதிர்கால வினையெச்சம், காரணம் முன்மை உடனிகழ்ச்சி நேர்ச்சி நிலைப்பாடு (Condition) ஐயநிகழ்ச்சி ஆகிய அறுபொருள் பற்றிவரும்.

எ-டு :

மழைபெய்யின் பயிர் விளையும்

கோழிகூவின் பொழுது விடியும்

முன்கை நீளின் முழங்கை நீளும்

ஒரு புதையல் கிடைத்தால் (நன்றாயிருக்கும்)

கூலிகொடுத்தால் வேலைசெய்வான்

வந்தால் வருவான்

-

காரணம் முன்மை உடனிகழ்ச்சி

நேர்ச்சி

நிலைப்பாடு

- ஐயநிகழ்ச்சி