உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

109

செயற்கு அல்லது செய்தற்கு என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம், நோக்கம் விளைவு ஆகிய இருபொருள்பற்றி வரும்.

எ-டு: படித்தற்கு வந்தான்

நோக்கம்

பணத்தைப் பறிகொடுத்தற்கு இவ்வழி போகின்றான்

விளைவு

முற்றெச்ச முடிபு

முக்கால வினைமுற்றுகளும் எச்சப் பொருளில் வருங்கால் இறந்தகால வினைமுற்று, (1) உடன்தொடர்ச்சி (2) உடனிகழ்ச்சி என்னும் இரு பொருளும்; நிகழ்கால வினைமுற்று, உடனிகழ்ச்சி என்னும் பொருளும்; எதிர்கால வினைமுற்று, (1)நோக்கம் (2) விளைவு என்னும் இரு பொருளும்; பற்றிவரும்.

இறந்தகால முற்றெச்சம்

எ-டு :

கண்டனன் எடுத்தான் = கண்டவுடன் எடுத்தான் = கண்டு எடுத்தான்

-

உடன் தொடர்ச்சி

பாடினன் வந்தான் = பாடிக்கொண்டு வந்தான் உடனிகழ்ச்சி

நிகழ்கால முற்றெச்சம்

காண்கின்றான் தொழுகின்றான் = கண்டுகொண்டு

தொழுகின்றான்

எதிர்கால முற்றெச்சம்

உடனிகழ்ச்சி

காண்பான் வந்தான் = காண வந்தான் - நோக்கம்

காலொடிவான் விழுந்தான் = காலொடிய விழுந்தான் - விளைவு

பண்டை முறைப்படி ஆண்பாற் படர்க்கை எதிர்கால முற்றெச்சமாகிய செய்வான் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இன்று ஏனை யிடம் பால்களிலும் வழங்கும்.

எ-டு: செய்வான் வந்தேன், வந்தேம்

செய்வான் வந்தாய், வந்தீர்

செய்வான் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன.

செய்வான் என்னும் வினையெச்சம் எல்லா இடம் பால் களிலும் வழங்கினும், இன்றும், அவ்வவ் விடத்திற்கும் பாலிற்கும் உரிய முற்றெச்சங்களை வழங்கத் தடையில்லை.