உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

(1) அத்திப் பூவை ஆர் அறிவார்?

(2) உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

(3) அடுப்புக்கட்டிக்கு அழகு வேண்டுமா?

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(4) நாளைவரும் பலாக்காயினும் இன்றுவரும் களாக்காய் மேல். (5) புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

(6) சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும். (7) பல துளி பெருவெள்ளம்.

(8) அமரிக்கை ஆயிரம் பெறும்.

(9) கோழியிற் பெட்டையும், வான்கோழியிற் சேவலும். (10) கடுநட்பு கண்ணைக் கெடுக்கும்.

(11) அடுத்தவனைக் கெடுக்கலாமா?

(12) அந்த வெட்கக்கேட்டை ஆரோடே சொல்லுகிறது? (13) அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா? (14) ஆனைக்கும் பானைக்கும் சரியாய்ப் போய்விட்டது.

(15) அன்றெழுதினவன் அழித்தெழுதுவானா?

(16) ஆனைக்கும் அடி சறுக்கும்.

(17) ஆயிரம்பேரைக் கொன்றவன் அரை மருத்துவன். (18) ஆசை வெட்கம் அறியாது.

(19) தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

(20) பொதியமலையிலே பிறந்து, பாண்டியன் புகழிலே கிடந்து, சங்கப் பலகையிலே இருந்து, வைகை யேட்டிலே தவழ்ந்து, நெருப்பிலே நின்று, புலவர் கருத்திலே நடந்து, நிலமகள் இடுப்பிலே வளர்கின்ற பேதை யார்? (21) கண்ணாற் கண்டு காதாற் கேட்டு மூக்கால் முகர்ந்து நாவாற் சுவைத்து உடலால் தொட்டு அறிகின்ற, ஐம்புலன்களையும் கொண்ட உயிர்கள் எவை? (22) குறடும் பேதையும் கொண்டது விடா.

(23) குழவிக்கு இல்லை குலமும் பகையும்.

(24) நன்றாய்ப் பழுத்ததும் சுவையுள்ளதும் பெரியதும் வாடாததுமான பழத்தைத் தெரிந்துகொண்டான்.

கூட்டுவாக்கியக் கூறுபடுப்பு

வட்டுவாக்கியத்தைக் கூறுபடுத்தற்கு, முதலாவது அதிலுள்ள கிளவியங்களைப் பிரித்துக்கொள்ளல் வேண்டும். பின்பு, ஒவ்வொரு கிளவியத்தையும் தனிவாக்கியம்போற் கூறுபடுத்தவேண்டும். கிளவியங்கட்கிடையில் ஏதேனும் இணைப்புச்சொல் (Connective or Conjunction) இருந்தால், அதைத் தனியாகக் காட்டவேண்டும்.

எ-டு : நாய்போன்ற நட்புவேண்டும்; யானைபோன்ற நட்புக் கூடாது; யானை அறிந்தறிந்தும் தன் பாகனையே கொல்லும்; நாயோ எந்நிலையிலும் தன் உடையானைக் காக்கும்.

இது ஒரு கூட்டு வாக்கியம்.

இதிலுள்ள கிளவியங்களாவன :-

(1) நாய்போன்ற நட்பு வேண்டும்.

(2) யானை போன்ற நட்பு கூடாது.

(3) யானை அறிந்தறிந்தும் தன் பாகனையே கொல்லும். (4) நாயோ எந்நிலையிலும் தன் உடையானைக் காக்கும்.

இவற்றைப் பின்வருமாறு கட்டமிட்டுக் கூறுபடுத்திக்

காட்டலாம்.