உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

சில கூட்டு

வாக்கியங்களில்

இணைப்புச்சொல் வரும்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கிளவியங்கட்கிடையே

எ-டு : இவ்வாண்டு மழை பெய்தது; ஆனால், குளம் நிரம்பவில்லை.

இதில், 'ஆனால்' என்பது இணைப்புச்சொல். இணைப்புச் சொல், தனித்து வரின் தனியிணைப்புச்சொல் என்றும், பல சேர்ந்து வரின் கூட்டிணைப்புச்சொல் (Compound Conjunction) என்றும், இவ்விரண்டாய் உறவுபூண்டுவரின் உடனுறவிணைப்புச் சொல் (Cor- relative Conjunction) என்றும், பெயர் பெறும்.

எ-டு : ஆனால்,

இருந்தாலும் தனியிணைப்புச் சொல். ஆனபோதிலும், இருந்தாற்கூட - கூட்டிணைப்புச் சொல்.

மட்டுமன்று

உம்

உடனுறவிணைப்புச் சொல்.

எ-டு : அவன் சிறுவன்தான்; ஆனாலும், கெட்டிக்காரன்.

இவர் பெருமுதல் போட்டிருக்கிறாராம்; இருந்தாற் கூட இப்படியா கொள்ளை அடிக்கிறது?

அவனுக்கு வீடுமட்டுமன்று; காடும் இருக்கிறது.

இம் மூன்று வாக்கியங்களிலும், மேற்காட்டிய மூவகை இணைப்புச்சொல்லும் முறையே வந்துள்ளமை காண்க. இணைப்புச் சொல், மீண்டும் இணைக்கப்படும் தொடர்களின் இயல்புபற்றி,

என

1. சமவியல் இணைப்புச்சொல் (Co-ordinating Conjunction) 2. சார்பியல் இணைப்புச்சொல் (Subordinating Conjunction) இருவகைப்படும்.

சமநிலைக் கிளவியங்களை ஒன்றோடொன்று இ ணைக்கும் சொல் சமவியல் இணைப்புச் சொல்லும், சார்நிலைக் கிளவியத்தைத் தலைமைக் கிளவியத்துடன் இணைக்கும் சொல் சார்பியல் இணைப்புச் சொல்லும் ஆகும்.

வற்றுள், முன்னது கூட்டுவாக்கியத்திற்கும் பின்னது கலப்பு வாக்கியத்திற்கும் உரியவை.

சமவியல் இணைப்புச்சொல், பொருளியல்புபற்றி,

1. அடுக்கிணைப்புச்சொல் (Cumulative or Copulative

Conjunction.)

2. மறுப்பிணைப்புச்சொல் (Adversative Conjunction.)