உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

125

3. மறுநிலை யிணைப்புச்சொல் (Alternative or Disjunctive Con- junction.)

4. முடிபிணைப்புச்சொல் (Illative Conjunction)

என நால்வகைப்படும்.

அடுக்கிணைப்புச்சொல் ஒருநிலைப்பட்ட பல கிளவியங்

களை அடுக்கும் அல்லது சேர்க்கும்.

களை

எ-டு : திருவாளர் சேதுப்பிள்ளை நன்றாய்ப் பேசுவதும் உண்டு; எழுதுவதும் உண்டு.

அறிவை வளர்க்கவேண்டும்; அதோடு அதைப் பயன்படுத்த வேண்டும்.

மறுப்பிணைப்புச்சொல் மாறுபட்ட கருத்துள்ள கிளவியங் இணைக்கும்.

எ-டு : அவர் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்தாம்; ஆனால், அவருக்கு ஆள்வினைத்திறமை யில்லை.

மறுநிலை யிணைப்புச்சொல், ஒன்றில்லையானால் மற் றொன்றைக் குறிக்கும் கிளவியங்களை இணைக்கும்.

எ-டு : ஒருவனுக்குச் சொன்மதி யிருக்கவேண்டும்; அல்லது தன்மதி இருக்கவேண்டும்.

இக் கட்டை பலாவாயிருக்கும்; இல்லாவிட்டால் வேங்கையா யிருக்கும்.

உங்கள் பணத்தைக் காசாகக் கொடுத்தாலும் சரி; காசோலையாகக் கொடுத்தாலும் சரி.

(காசோலை - cheque)

முடிபிணைப்புச்சொல், ஓர் ஏதுவைக்கொண்டு ஊகிப்பதை யாவது ஒரு சான்றைக்கொண்டு துணிவதையாவது குறிக்கும் கிளவியங்களை ணைக்கும். பல தொகைகளைக் கூறும் கிளவியங்களுடன், அவற்றின் கூட்டு, கழிப்பு முதலிய முடிபைக் குறிக்கும் கிளவியத்தையும் இதுவே இணைக்கும்.

எ-டு : இங்கே புகையிருக்கிறது; ஆகவே நெருப்பிருத்தல் வேண்டும்.

தமிழ் வடமொழிக்கு முந்தியது; ஆகையால் தமிழ் வட மொழியின் கிளையாயிருக்க முடியாது.