தொடரியல்
125
3. மறுநிலை யிணைப்புச்சொல் (Alternative or Disjunctive Con- junction.)
4. முடிபிணைப்புச்சொல் (Illative Conjunction)
என நால்வகைப்படும்.
அடுக்கிணைப்புச்சொல் ஒருநிலைப்பட்ட பல கிளவியங்
களை அடுக்கும் அல்லது சேர்க்கும்.
களை
எ-டு : திருவாளர் சேதுப்பிள்ளை நன்றாய்ப் பேசுவதும் உண்டு; எழுதுவதும் உண்டு.
அறிவை வளர்க்கவேண்டும்; அதோடு அதைப் பயன்படுத்த வேண்டும்.
மறுப்பிணைப்புச்சொல் மாறுபட்ட கருத்துள்ள கிளவியங் இணைக்கும்.
எ-டு : அவர் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்தாம்; ஆனால், அவருக்கு ஆள்வினைத்திறமை யில்லை.
மறுநிலை யிணைப்புச்சொல், ஒன்றில்லையானால் மற் றொன்றைக் குறிக்கும் கிளவியங்களை இணைக்கும்.
எ-டு : ஒருவனுக்குச் சொன்மதி யிருக்கவேண்டும்; அல்லது தன்மதி இருக்கவேண்டும்.
இக் கட்டை பலாவாயிருக்கும்; இல்லாவிட்டால் வேங்கையா யிருக்கும்.
உங்கள் பணத்தைக் காசாகக் கொடுத்தாலும் சரி; காசோலையாகக் கொடுத்தாலும் சரி.
(காசோலை - cheque)
முடிபிணைப்புச்சொல், ஓர் ஏதுவைக்கொண்டு ஊகிப்பதை யாவது ஒரு சான்றைக்கொண்டு துணிவதையாவது குறிக்கும் கிளவியங்களை ணைக்கும். பல தொகைகளைக் கூறும் கிளவியங்களுடன், அவற்றின் கூட்டு, கழிப்பு முதலிய முடிபைக் குறிக்கும் கிளவியத்தையும் இதுவே இணைக்கும்.
எ-டு : இங்கே புகையிருக்கிறது; ஆகவே நெருப்பிருத்தல் வேண்டும்.
தமிழ் வடமொழிக்கு முந்தியது; ஆகையால் தமிழ் வட மொழியின் கிளையாயிருக்க முடியாது.