உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(14) பெரும! கிள்ளிவளவ! நீர்செறிந்த பெரிய கடல் எல்லையாகக் காற்று ஊடுபோகாத வானத்தைச் சூடிய மண் செறிந்த உலகத்தின்கண், குளிர்ந்த தமிழ்நாட்டிற் குரியராகிய முரசொலிக்கும் படையினை யுடைய மூவேந்தர் அரசுள்ளும், அரசென்று சிறப்பித்துச் சொல்லப்படற் குரியது நினதே!

திசையினும்

(15) விளங்கிய கதிரையுடைய ஞாயிறு ஞாயிறு (சூரியன்) நான்கு தோன்றினும், விளங்கிய தியையுடைய வெள்ளிமீன் தென்திசைக்கண் செல்லினும், அழகிய குளிர்ந்த காவிரி வந்து பலகாலா யோடி யூட்ட, தொகுதி காண்ட வேலின் தோற்றம்போலக் கரும்பின் வெண்பூ அசையும் நாடென்று சொல்லப்படுவது சோழனதே.

(16) அறக்கடவுள் ஆராய்ந்தாற்போன்ற ஆராய்ச்சியையுடைய நீதியை வேண்டும் காலத்திற் பெற்றோர், மழை வேண்டுங் காலத்தில் அதைப் பெற்றவராவர்.

(17) அரசனது வானளாவிய வெண்கொற்றக் குடை, ஞாயிற்றைத் தன்மேற்கொண்டு உயர்ந்த வானத்தின் நடுவே நின்று வெயிலை மறைக்கும் முகிலைப்போல, வெயிலை மறைத்தற்குக் கொண்டதன்று.

(18)

(19)

பனந்துண்டம்போலக் கைகால்கள் வேறுவேறு துணி பட்டுக் கிடக்கும்படி, யானைக் கூட்டங்கள் பொரும் பரந்த போர்க்களத்தின்கண், தாக்கவரும் பகைவர் படையை எதிர்த்து அது தோற்றோடும்போது ஆரவாரிக்கும் படைபெறும் வெற்றியும், உழவுசாலில் விளைந்த நெல்லின் பயனே.

மழை பெய்யுங்காலத்துப் பெய்யாதொழியினும், விளைவு குறையினும், இயல்பல்லாதன மக்கள யல்பல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினும், காவலரைப் பழிக்கும் இப் பரந்த உலகம்.

(20) ஓர் அரசன், குறளை கூறுவாருடைய சொல்லைக் கொள் ளாது உழவர் குடியைப் பாதுகாத்து, அதன் வாயிலாய் ஏனைக் குடிகளையும் பாதுகாப்பானாயின், அவன் அடியைப் போற்றுவர் அவன் பகைவர்.

(21) "இனிய வுளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று".

(22) “பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின்.'