உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(23) "ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகமுடையாள் மெய்நோவ அடிமை சாவ மாவீரம் போகுமென விதைகொண் டோட

வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

குருக்கள்வந்து தட்சிணைக்குக் குறுக்கே நிற்கப் பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்

பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே.”

135

(24) "மூவேந் தரும்அற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றோ

(25)

கோவேந் தரும்அற்று மற்றொரு வேந்தன் கொடையும்

டெட்டுக்

அற்றுப்

பாவேந்தர் காற்றில் இலவம்பஞ் சாகப் பறக்கையிலே தேவேந்த்ர தாருஒத் தாய்ரகு நாத சயதுங்கனே.”

66

'அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச விரைசெறி கமலத் தாள்சேர் வெண்ணெய்மன் சடையன்

தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான்

கதம்ப வாக்கியக் கூறுபடுப்பு

மௌலி.

"2

கதம்ப வாக்கியத்தைப் பின்வருமாறு கூறுபடுத்தல் வேண்டும்: முதலாவது, கதம்பவாக்கியம் முழுவதையும் ஒன்றாகக் கொண்டு தனிவாக்கியம்போற் கூறுபடுத்தல் வேண்டும்.

இரண்டாவது, கதம்பவாக்கியத்திற் கலந்துள்ள வாக்கிய வகைகளைப் பிரித்துக் காட்டல்வேண்டும்.

மூன்றாவது, ஒவ்வொரு வாக்கிய வகையையும் சேர்ந்த கிளவியத்தை அல்லது கிளவியங்களைத் தனித்தனி கூறுபடுத்தல் வேண்டும்.

குறிப்பு: சில கதம்பவாக்கியங்கட்கு முதல்வகைக் கூறுபடுப்பு அமையாது. அவற்றிற்கெல்லாம் ஏனையிரு வகைகளே அமையும்.

எ-டு : யானை போன்றவருடன் நட்டல்கூடாது; நாய் போன்றவருட னேயே நட்டல்வேண்டும்; யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்; நாயோ உடையான் எறிந்த வேல் தன் உடம்பை ஊடுருவி யுள்ளபோதும் தன் வாலையாட்டும்.