உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

"பாட்டி! பாட்டி! உனக்குச் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று மாட்டுக்காரப் பையன் கேட்டதற்கு, "அப்பா! சுட்டபழம் வேண்டா, சுடாத பழமே போடு" என்றார் ஒளவையார்.

து ஒரு கதம்பவாக்கியம். இதன் கூறுபடுப்பாவது.

முதற்கூறுபடுப்பு

'ஒளவையார்' எழுவாய்; 'என்றார்' பயனிலை; “அப்பா!.... போடு' செயப்படுபொருள்; “பாட்டி!.. கேட்டதற்கு" பயனிலையடை.

இதன் கட்ட அமைப்பு

எழுவாய்

பயனிலை

பயனிலைச்

பயனிலையடை

சொல்

ஒளவையார்

என்றார்

"பாட்டி!பாட்டி!

உனக்குச் சுட்ட பழம் வேண்டுமா?

சுடாத பழம்

செயப்படுபொருள்

அப்பா! சுட்ட

பழம் வேண்டாம்,

சுடாத பழமே போடு

வேண்டுமா?"

என்று மாட்டுக்

காரப் பையன்

கேட்டதற்கு

இரண்டாம் கூறுபடுப்பு

பாட்டி! பாட்டி! உனக்குச் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? - இது ஒரு கூட்டு வாக்கியம்.

து

"பாட்டி! பாட்டி! உனக்குச் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று மாட்டுக்காரப்பையன் கேட்டதற்கு - இது ரு கிளவியங்களை உள்ளிட்ட ஒரு வினையெச்சக் கிளவியம். அப்பா!சுட்டபழம் வேண்டா, சுடாத பழமே போடு ஒரு கூட்டு வாக்கியம்.

து

"அப்பா! சுட்டபழம் வேண்டா, சுடாத பழமே போடு" என்றார் ஔவையார் - இது ஒரு கலப்பு வாக்கியம்.

ஆகவே, இரு கூட்டுவாக்கியங்களை யுள்ளிட்ட ஒரு கலப்பு வாக்கியமாக வுள்ளது இக் கதம்ப வாக்கியம்.