உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

குறிப்பு : 'இனிக்கிறது', 'இனியது' என்னும் இருசொற்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாயினும், இவற்றுள் முன்னது தொழில் வடிவிலும் பின்னது பண்பு வடிவிலும் இருக்கின்றன என, வேறுபாடறிதல் வேண்டும்.

பயனிலையடை வடிவுகள்

பயனிலையடை பின்வருமாறு பல வடிவுகளில் வரும்:

1. வினையெச்சம்

எ-டு: வந்து (போனான்)

தெரிநிலை

இல்லாது (இருக்கிறான்) - குறிப்பு

2. வேற்றுமையேற்ற பெயர்

எ-டு : வீட்டில் (இருக்கிறான்)

மரத்தினின்று (விழுந்தது)

3. இப்பெயரையும் காலப்பெயரையும் தழுவிய பெயரெச்சம்

எ-டு : வந்தவிடத்து (நேர்ந்தது)

சொல்லும்போது (நன்றாயிருந்தது)

4.இடைச்சொல்

எ-டு : கொன்னே (கழிந்தது)

கொன்னே = வீணாக.

5. உரிச்சொல்

எ-டு : சால (உண்டான்)

நனி (சிறந்தது)

6. தொடர்மொழி

எ-டு : ஆறுமாத காலமாக (நடக்கிறது)

எத்தனைமுறை சொன்னாலும் (தெரியவில்லை)

7. கிளவியம்

எ-டு : உயிர்போனாலும் (சொல்லமாட்டான்)

8. கிளவியத்தை யுள்ளிட்ட கிளவியம்

எ-டு : மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா?

இதன் விரிவு : மயிலே மயிலே நீ இறகு போடு என்று ஒருவர் சொன்னால் அது போடுமா? என்பது.