உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

153

இதில், 'மயிலே மயிலே இறகு போடு' என்பது ஒரு கிளவியம். தையுள்ளிட்ட கிளவியம் ‘மயிலே! மயிலே! இறகு போடு என்றால்'

என்பது.

பயனிலையடைப் பொருள்வகைகள்

பயனிலையடைப்பொருள் பின்வருமாறு பலவகைப்படும்:

1. காலம்

எ-டு : நேற்று (வந்தான்).

மழைநாள்களில் (வளரும்).

2.இடம்

எ-டு : இங்கே (இருக்கிறான்).

ஐந்து கண்டத்திலும் (அதைக் காணலாம்).

3. நோக்கம்

எ-டு : பரிசுபெறும் பொருட்டுப் (படித்தான்).

மகனைப் படிக்கவைத்தற்காக (அவர் இங்கே வந்திருக்கிறார்).

4. காரணம்

எ-டு : சூதாடித் (தோற்றான் பொருளையெல்லாம்). அடிப்படையில்லாததினால் (கட்டடம் விழுந்தது).

5.விளைவு

எ-டு : ஊரெல்லாம் கேட்கும்படி (உரக்கக் கத்தினான்). பிறர் நெஞ்சம் புண்படும்படி (பேசக்கூடாது).

6. நிலைப்பாடு (Condition)

எ-டு : இம் மாதம் 20ஆம் நாளுக்குள் பணம் கட்டிவிட்டால் (வட்டி வேண்டியதில்லை).

7.ஒப்பீடு

இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்காவிட்டால் (தண்டனை ஏற்படும்).

எ-டு : முன்னிலும் சிறப்பாகப் (பேசினார்).

(ஞாலம்) திங்களைவிட ஐம்பத்தைந்து மடங்கு (பெரியது).