உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

8. வைத்துக்கொள்வு (Supposition) அல்லது இணக்கம் (concession)

எ-டு : அவர் நேரில் வந்து கேட்டாலும் (என் புத்தகத்தை இரவல் கொடுக்க முடியாது).

9.தன்மை

அடாத மழை பெய்தாலும் (விடாது வகுப்பு நடத்தப்பெறும்).

எ-டு : நன்றாய் (இருக்கிறது படம்).

10.அளவு

அன்போடு (அளவளாவுவார்).

எ-டு : சரிசமமாய் (இருக்க விரும்புகிறான்).

நெடுங்காலமாக (அந்தப் பேச்சு நடந்துவருகிறது). ஆனைக்கும் பூனைக்கும் உள்ள அளவு (அவருக்கும் எனக்கும் வேற்றுமையுண்டு).

(தான் வாங்கின ஒரு படியை) இருபடியாகக் (கொடுத்து விட்டான்).

நிலைப்பாடு உணர்த்தப்பெறும் வகைகள்

1. எதிர்கால வினையெச்சம்

எ-டு : அவன் வந்தால் கிடைக்கும் - உடன்பாடு அவன் வராவிடின் கிடையாது.

எதிர்மறை.

2.ஏவல்

எ-டு : கேள், கொடுப்பார்.

3. ஒழிய என்னும் சொல்லொடுகூடிய எதிர்கால வினையெச்சம்

எ-டு : இவ் வேலையை முடித்தாலொழிய உனக்குக் கூலி கிடையாது.

இவ்வகை என்றும் எதிர்மறையே குறிக்கும்.

4. காலப்பெயரோடும் இடப்பெயரோடும் கூடிய பெயரெச்சம்

எ-டு: அவர் இங்கு வரும் பக்கத்தில், ஆயிரம் உருபா வேண்டுமாயினும் தருகின்றேன்.

அவர் இங்கு வரும்போது கொடுப்பேன்.

5. வினையாலணையும் பெயர்

எ-டு : படித்தவன் தேறுகின்றான்.

போனவனுக்குக் கிடைக்கின்றது.