உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

6. வினாச்சொல்லும் அப்படியானால் என்னும் இணைப்புச் சொல்லும்

எ-டு : நீயும் அவர்களில் ஒருவனா? அப்படியானால் இங்கே இராதே.

நீ எதிர்க் கட்சிக் கூட்டத்திற்குப் போனாயா? அப்படியானால்

உனக்கு வேலையில்லை, போ.

7. 'ஆனால்', 'எனில்' முதலிய சொற்களில் ஒன்றோடுகூடிய பெயரும் வினைமுற்றும்

எ-டு: நீ இந்தக் கடிதத்தைப் படித்தாயானால் உனக்கு உண்மை விளங்கும்.

அது புலியானால் என் செய்வோம்?

வரப்போகிற கல்வியமைச்சர் தமிழரானால் தமிழுக்கு ஆக்கம் உண்டாகும்.

8. 'ஆய்' என்னும் விகுதியோடும், 'இருந்தால்' என்னும் சொல்லோடும் கூடிய துவ்விகுதித் தொழிற்பெயர்,

எ-டு : அவர் வருகிறதாயிருந்தால் சொல்,

9. வினைமுற்று

சி

வண்டியனுப்புகின்றேன்.

எ-டு : அவன் அங்குப் போனான், செத்தான்.

155

ப் பொருளில் பெரும்பாலும் இறந்தகால வினைமுற்றும் றுபான்மை நிகழ்கால வினைமுற்றும் வரும்; எதிர்கால வினைமுற்று வரவே வராது. இப் பொருளில் வரும் வினைமுற்றை ஒலிக்கும்போது குரல் வேறுபடும்.

10. முற்றுப்பயனிலையும் என்று வைத்துக்கொள் என்னும் தொடரும்

இதில், வைத்துக்கொள் என்னும் ஏவற்குப் பதிலாக வைத்துக்கொள்வோம் என்னும் தன்மைப் பன்மை வினைமுற்றும், வைத்துக்கொண்டால் என்னும் எதிர்கால வினையெச்ச மும் வரும்.

எ-டு: இன்றைக்குத் திடுமென்று உண்ணோட்டகர் (Inspector)

வந்துவிட்டார் என்று வைத்துக்கொள் (வைத்துக்கொள்வோம்); அப்போது எப்படிக் கணக்குக் காட்டுகிறது?