உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

11. முற்றுப்பயனிலையும் 'அப்போது' அல்லது 'அப்படியானால்' என்னும்

சொல்லும்

எ-டு : ஐயா, இன்றைக்கு மழையே வந்துவிட்டது, அப்போது இவற்றையெல்லாம் எப்படி அள்ளுவது?

நீ ஒரு சிறு பையன்; அப்படியானால் என்ன செய்வாய்?

12. இறந்தகால வினையெச்சம்

எ-டு: படித்துத் தேறவேண்டும் = படித்தால் தேறலாம்.

13. நிகழ்கால வினையெச்சம்

எ-டு : வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; செநல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோனுயரும்; கோனுயரக் கோலுயரும்.

14. செய்யவேண்டும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

எ-டு : தேடவேண்டும்; தின்னவேண்டும்.

படிக்கவேண்டும், தேறவேண்டும்.

தேடினால் தின்னலாம், படித்தால் தேறலாம் என்பது

இவற்றின் பொருள்.

வைத்துக்கொள்வு அல்லது இணக்கம் உணர்த்தப்பெறும் வகைகள்

1. உம்மீறு பெற்ற இறந்தகால வினையெச்சம்

எ-டு : இவ்வூருக்கு வந்தும் என்னைப் பாராது போயிருக்கின்றான். நான் பலமுறை சொல்லியும், அவன் கேட்கவில்லை.

2. உம்மீறு பெற்ற எதிர்கால வினையெச்சம்

எ-டு : ஆயிரம் உருபா கொடுத்தாலும் அவன் இதற்கு இணங்கமாட்டான்.

பால் புளிப்பினும் பகல் இருளினும் நீ இவளைக் கைவிடல் கூடாது.

உன் பெற்றோர் உன்னைக் காவாவிட்டாலும், நான் உன்னைக் காப்பேன்.

3. போதிலும் என்னும் சொல்லோடு கூடிய இறந்தகாலப் பெயரெச்சம்

எ-டு: அவன் உன்னைத் தடுத்தபோதிலும், உன் வாக்கை

மாற்றக் கூடாது.