உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

4. ஏவல் வினை

எ-டு : நீ ஆயிரம் சொல், அவன் கேட்கமாட்டான். 5. ஏவல் வினையும் ஆனாலும் என்னும் சொல்லும்

எ-டு : நீ ஆயிரம் சொல்; ஆனாலும் அவன் கேட்கமாட்டான்.

6. முன்னிலை வினைமுற்று

எ-டு : நீ ஆயிரம் சொன்னாய்; அவன் கேட்கமாட்டான். 7. முன்னிலை வினைமுற்றும் ஆனாலும் என்னும் சொல்லும்

எ-டு : நீ ஆயிரம் சொன்னாய், ஆனாலும் அவன் கேட்கமாட்டான்.

8. வினைமுற்றும், 'ஆனாலும்' ‘ஆனபோதிலும்' 'இருந்தாலும்' 'இருந்த போதிலும்' ‘என்றாலும்' 'என்றபோதும்' என்னும் சொற்களில் ஒன்றும்

எ-டு : அவன் உன் பொருளைத் திருடியேவிட்டான். ஆனாலும் இப்படி முரட்டுத்தனமாய் அடிக்கலாமா?

அவன் ஒரு கொலைகாரன்தான்; ஆனாலும் அவனைத் திருத்தக் கூடாதா?

9. வினைமுற்றும் 'என்று வைத்துக்கொண்டாலும்' என்னும் தொடரும்

எ-டு: அவன் திருடன் என்று வைத்துக்கொண்டாலும், நமக் கொரு தீங்கும் செய்யவில்லையே!

நிரப்பிய வடிவுகள் (The Different Forms of Complement)

1. பெயர்ச்சொல்

நிரப்பியம் பின்வருமாறு பல வடிவுகொள்ளும்:

எ-டு : இன்று இருட்டாயிற்று.

2. வேற்றுமையேற்ற பெயர்

எ-டு : மாட்சிமை தங்கிய 6ஆம் சியார்சு மன்னர் 19ஆம் அகவையில் பட்டத்திற்கு வந்தார்.

3. வினைமுற்று

எ-டு : இன்று மழை வரும் போலும்.

4.வினையெச்சம்

-டு : படம் நன்றாயிருக்கிறது.

157