உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

5. இடைச்சொல்

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும்.

6. உரிச்சொல்

காலம் பார்த்துச் செய்பவருக்கு ஞாலங் கொள்வதும்

தஞ்சம் ஆகும்.

தஞ்சம் = எளிமை.

எ-டு : இதில் ஐந்துக்கு மூன்று பழுதாகும்.

7. தொடர்மொழி

எ-டு :மேன்மை தங்கிய பெருமகனார் சக்கரவர்த்தி அரச கோபாலாச்சாரியார் 1948ஆம்

பதிலரையர் (Viceroy ) ஆனார்.

ஆண்டில் இந்தியப்

குறிப்பு : ஒரே சொல் வெவ்வேறிடத்தில் வெவ்வேறு பொருள்படலாம். பொருள் நோக்கி நிரப்பியத்தைக் கண்டுபிடித்தல் வேண்டும்.

'நேரம் ஆய்விட்டது' என்னும் தொடரில், 'ஆய்விட்டது' என்பது, வந்துவிட்டது என்றாவது சென்றுவிட்டது என்றாவது முடிந்துவிட்டது என்றாவது பொருள்படும் வினைமுற்று; 'நேரம்' என்பது எழுவாய். 'இன்று இருட்டாய்விட்டது' என்னும் தொடரில் இருட்டாய்விட்டது என்பது இருட்டாக மாறிவிட்டது என்று பொருள்படும் தொடர்மொழி. இதில், 'இன்று' எழுவாய்; ‘ஆய்விட்டது' பயனிலை; 'இருட்டு' நிரப்பியம்.

,

துணைவினைகளை யடுத்துவரும் பிறசொற்களை நிரப்பிய மென்று மயங்குதல் கூடாது.

எ-டு : குடியிரு, எடுத்துவிடு.

இவற்றில், இரு எடு என்பன துணைவினைகள்.

பயிற்சி

பின்வரும் வாக்கியங்களிலுள்ள மூவகை யடைகளையும் நிரப்பியங்களையும் எடுத்தெழுதி, அவற்றுள் ஒவ்வொன்றும் இன்னின்ன வகையென்று குறிப்பிடுக:

(1)

அண்மையில் வந்த வெள்ளத்தினால், மேடு பள்ள மாயிற்று; பள்ளம் மேடாயிற்று.

(2) முதல் குலோத்துங்கன் பொருதே முடிசூட முடிந்தது. இவர் போனமாதம் சாகப் பிழைக்கக் கிடந்தார்.

(3)