உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

175

விழாவிற்குத் தலைமை தாங்கினார். இன்று எங்கட்கு விடுமுறை.

(8) கணக்கில் 30 வரையம் (Marks). ஆங்கிலத்தில் 40 வரையம். அறிவியலில் 45 வரையம். வரலாற்று நூலில் 35 வரையம். ஞலநூலில் 22 வரையம். தமிழில் 28 வரையம். அவை மொத்தம் 200 வரையம். (ஞாலநூல்Geography)

(9) என்

என்

வேலைக்காரன் ஓடிப்போய்விட்டான். கடிகாரத்தைக் காணவில்லை. அவன் அதை எடுத்திருக்க வேண்டும்.

(10) அவர் ஆங்கிலேயரல்லர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. (11) சிறியார் உதவியும் பெரியார்க்கு வேண்டியிருக்கும். அவரை இகழக்கூடாது.

(12) அது மடங்கல் (சிங்கம்) அன்று. அது கனைக்கின்றது. அது வேங்கையன்று. அதற்கு வரியில்லை. அது சிறுத்தையன்று. அதற்குப் புள்ளியில்லை. அது வேறொன்றாயிருக்கும். வாக்கிய ஒன்றுசேர்ப்பு (தொடர்ச்சி)

பல தனிவாக்கியங்களை ஒரு கலப்பு வாக்கியமாக மாற்றும் வழிகள்

பல தனிவாக்கியங்களுள் ஒன்றையேனும் பலவற்றையேனும், பெயர்க் கிளவியமாகவோ பெயரெச்சக் கிளவியமாகவோ வினையெச்சக் கிளவியமாகவோ மாற்றுவதால், அவற்றைக் கலப்பு வாக்கியமாக்கலாம்.

பெயர்க் கிளவியக் கலப்பு வாக்கியம்

(1) ஒரு தனிவாக்கியத்தின்பின் 'என்பது' அல்லது ‘என்று’ என்னும் சொல்லைச் சேர்த்தல்.

எ-டு : நல்வாழ்க்கையே நற்சமயம். இது நல்ல கொள்கை. நல்வாழ்க்கையே நற்சமயம் என்பது நல்ல கொள்கை.

இவ்வழி போகக்கூடாது. இது எனக்குத் தெரியாது. இவ்வழி போகக்கூடாது என்று எனக்குத் தெரியாது.

(2) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைத் தொழிற் பெயராக்கல்.

எ-டு : நேற்றிரவு மழை பெய்தது. இது எல்லாருக்கும் தெரியும். நேற்றிரவு மழை பெய்தது எல்லாருக்கும் தெரியும்.