உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(3) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கல்.

எ-டு : பெரியோர் ஒன்று கொடுப்பார். அதைத் தட்டாமல் வாங்கவேண்டும்.

பெரியோர் கொடுப்பதைத் தட்டாமல் வாங்க வேண்டும்.

பெயரெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியம்

ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைப் பெயரெச்சமாக்கு வதால், பல தனிவாக்கியங்களை ஒரு பெயரெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியமாக மாற்றலாம்.

எ-டு : செருமானியர் பல பொருள்கள் செய்கின்றனர்.

அவையெல்லாம் சிறந்தவை.

செருமானியர் செய்கின்ற பொருள்களெல்லாம் சிறந்தவை

வினையெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியம்

(1) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றை வினையெச்ச மாக்கல்.

எ-டு : மழை பெய்யும். பயிர் விளையும்.

மழை பெய்து பயிர் விளையும்.

(அல்லது)

மழை பெய்யப் பயிர் விளையும்.

(அல்லது)

மழை பெய்யின் பயிர் விளையும்.

தொலைவரி (தந்தி) வந்தது. செய்தி தெரிந்தது.

தொலைவரி வந்து செய்தி தெரிந்தது.

தென்னம்பிள்ளை வளர்ந்து பலன் தரும். அதற்கு எட்டாண்டு செல்லும்.

தென்னம்பிள்ளை வளர்ந்து பலன் தர எட்டாண்டு செல்லும்.

புத்தகம் கொடு. படிக்கிறேன்.

புத்தகம் கொடுத்தால் படிக்கிறேன்.

(2) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றை வினையெச்சமாக்கி, அதனொடு 'உம்' என்னும் இடைச்சொல்லைச் சேர்த்தல்.

எ-டு: அவனுக்கு நான் எவ்வளவோ சொன்னேன். அவன்

கேட்கவில்லை.

அவனுக்கு நான் எவ்வளவோ சொல்லியும், (அவன்)

கேட்கவில்லை.

ஆயிரம் பேர் வரலாம். நான் அஞ்சேன்.

ஆயிரம் பேர் வந்தாலும் (நான்) அஞ்சேன்.