உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

177

(3) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைப் பெயரெச்சமாக்கி, அதனொடு காலப்பெயரை அல்லது இடப்பெயரைச் சேர்த்தல்.

எ-டு : ஆங்கிலேயர் இங்கு வாணிகஞ் செய்ய வந்தார். இத் தேசம் நூற்றுக் கணக்கான சீமைகளாகப் பிரிந்து கிடந்தது.

ஆங்கிலேயர் இங்கு வாணிகஞ் செய்ய வந்தபோது, இத் தேசம் நூற்றுக் கணக்கான சீமைகளாகப் பிரிந்து கிடந்தது.

தலைவி பூக்கொய்யச் சென்றான். ஒரு களிறு பிளிறிக் கொண்டு வந்தது.

தலைவி பூக்கொய்யச் சென்றவிடத்து, ஒரு களிறு பிளிறிக் கொண்டு வந்தது.

மூப்பு வரும். பொருள் தேடி வைத்துக்கொள்ள வேண்டும்.

மூப்பு வருமுன் பொருள் தேடி வைத்துக்கொள்ள வேண்டும்.

(4) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைப் பெயரெச்சமாக்கி, அதனொடு ‘ஆறு', 'படி', 'பொருட்டு' முதலிய சொற்களுள் ஒன்றைச் சேர்த்தல்.

எ-டு : குழந்தை நலமடையவேண்டும். தாய் பத்தியங் காக்கவேண்டும். குழந்தை நலமடையுமாறு, தாய் பத்தியங் காக்க வேண்டும்.

நீ சொன்னாய். மழை வந்துவிட்டது.

நீ சொன்னவாறு மழை வந்துவிட்டது. வரும்படி வரும். நீ முயற்சி செய்யவேண்டும்.

வரும்படி வரும்படி நீ முயற்சி செய்யவேண்டும்.

தலைவன் சொல்வான். வேலைக்காரன் செய்ய வேண்டும்.

தலைவன் சொன்னபடி வேலைக்காரன் செய்ய வேண்டும்.

(5) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றை 4ஆம் வேற்றுமை யேற்ற தொழிற்பெயராக்கல்.

எ-டு : தென்னாப்பிரிக்க இந்தியர் விடுதலை யடைய வேண்டி

யிருந்தது. பெரியான்மா காந்தியார் அங்கு சென்றார்.

தென்னாப்பிரிக்க இந்தியர் விடுதலை பெறுதற்காக (பெறுதற்பொருட்டு), பெரியான்மா காந்தியார் அங்கு சென்றார்.