உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(6) ஒரு தனிவாக்கியத்தின் முற்றுப் பயனிலையோடு காரண விடைச்சொலைச் சேர்த்தல்.

எ-டு : பவணந்தி முனிவர் சமணர். அவருக்குப் பொருளதிகாரம் விருப்பமன்று.

பவணந்தி முனிவர் சமணரானதினால், அவருக்குப் பொருளதிகாரம் விருப்பமன்று.

இந்தியா விடுதலை யடைந்தது. வெள்ளைக்காரர் வெளியேறினர்.

இந்தியா விடுதலை யடைந்ததினால், வெள்ளைக்காரர் வெளியேறினர்.

(7) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைத் தொழிற்பெயர் அல்லது எதிர்கால வினையெச்சமாக்கி, அதனொடு உவமவுருபைச் சேர்த்தல்.

எ-டு : புலி யானைகளின்மேற் பாயும். செங்குட்டுவன் அங்ஙனம் வடவரசர்மேற் பாய்ந்தான்.

புலி யானைகளின்மேற் பாய்வது போலச் செங்குட்டுவன் வடவரசர்மேற் பாய்ந்தான்.

நான் சொன்னேன். அங்ஙனம் செய்.

நான் சொன்னாற்போலச் செய்.

பயிற்சி 1

கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை, ஒவ்வொரு பெயர்க் கிளவியக் கலப்பு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக:

(1) அன்பே ஆண்டவன். இது உலகப் பொதுக் கொள்கை.

(2) கடவுளுக்கு உருவமில்லை.

உணராதிருக்கின்றனர்.

வ் வுண்மையைப் பலர்

(3) ஆடு கொழுக்கின்றது. அது இடையனுக்கு ஊதியம். (4) ‘உதிரம் உறவறியும்'. இது ஒரு பண்டைப் பழமொழி. (5) அன்பும் சிவமும் ஒன்று. இங்ஙனம் திருமூலர் கூறினார். (6) நேற்றுவரை காட்சிச்சாலை இருந்திருக்கிறது. இது எனக்குத் தெரியாது போயிற்று.

(7) மக்களெல்லாரும் ஒருதாய் வயிற்றினர். இது மாந்தனூலால் அறியப்பட்ட உண்மை.