உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

179

(8) தமிழ் ஒரு தனிமொழி. இதை முதன்முதல் உலகிற்கு விளக்கியவர் கால்டுவெல் கண்காணியார்.

(9)

ல்லறத்தான் இரப்போர்க்கு

இறைவனுக்கு ஈவதாகும்.

ஈயவேண்டும். அது

(10) ஒருவன் உளந் தூயனாயிருத்தலே அறம். இது அறத்தின் தலைசிறந்த இலக்கணம்.

(11) இந்தியா விடுதலை யடைந்தது. இது இந்தியர்க்கு ஒரு பெரிய நன்மை.

(12) கொடுப்பார் கொடுப்பார். கெடுப்பார் கெடுப்பார்.

பயிற்சி 2

கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை, ஒவ்வொரு பெயரெச்சக்

கிளவியக் கலப்பு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக :

(1) எங்கள் ஆசிரியர் ஒரு கதை சொன்னார். அது

து.

(2) இறப்பு ஒருநாள் வரும். அந் நாளை ஒருவரும் முன்னதாக

அறிய முடியாது.

(3) அவன்

சம்பளம்

போதவில்லை.

வாங்குகிறான். அது அவனுக்குப்

(4) விளையாட்டுப்பிள்ளை வேளாண்மை செய்யலாம். அது வீடு வந்து சேராது.

(5) தமிழர் சில மாதங்களில் திருமணம் செய்வார்கள். அவை சித்திரை, ஆனி, ஆவணி, தை என்பன.

(6) தலைச்சங்கம் தென்மதுரையில் இருந்தது. அது இன்று கடலுள் முழுகிக் கிடக்கின்றது.

(7) பாண்டித்துரைத்தேவர்

ஏராளமாகப் பழந்தமிழ்ச் சுவடிகளைத் தொகுத்து வைத்திருந்தார். அவை யாவும் ஒரு நாள் எரிவாய்ப்பட்டன.

(8) காந்தியடிகள் திடுமென்று கொலையுண்டார். அச் செய்தி காட்டுத்தீப் போற் பரவிற்று.

(9) ஆனை ஒரு வேலையைச் செய்யமுடியவில்லை. அதைப் பூனை செய்யுமா?

(10) கோடரி ஒரு தண்டுக்கு நாணும். அது வாழை.