உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(11) ஒருவர் ஒரு நாளில் பிறப்பார். ஒருவர் அந் நாளில் இறப்பார்.

(12) ஒருவர் ஒரு நோய் கொள்ளலாம். அது பல தலை முறைக்குப் பின்னும் அவர் வழியினர்க்கு வரும்.

பயிற்சி 3

கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு வினையெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக :

(1) பொழுது புறப்படும். வண்டி புறப்படும்.

(2) இடி விழுந்தது. கட்டடம் விழுந்தது.

(3) வெள்ளம் வரும். அணை கோலிக்கொள்ள வேண்டும். (4) மூன்று பேர் முன்னே நின்று ஒரு குதிரையின் கடிவாளத் தைப் பிடித்து இழுத்தார்கள். இரண்டு பேர் பின்னே நின்று அதைத் தள்ளினார்கள். ஒருவன் மேலேயிருந்து அதைத் தூண்டினான். அது மாதம் காதவழி போயிற்று.

(5) ஒருவன் ஒரு கதை சொன்னான். ஒருவன் ஒரு கேள்வி கேட்டான். ஒருவன் சில கற்களை எறிந்து கொண் டிருந்தான். ஒருவன் மணியடித்துக் கொண்டிருந்தான். ஒருவன் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தான். ஒருவன் ஒரு கணக்குப் போட்டான். ஒருவன் ஒரு விடுகதை சொன்னான். ஒருவன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். வீராசாமிச் செட்டியார் எண்கவனம் நடந்தது.

(6) காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையார் பாட்டுப் பாடினார். சென்னை அழகநம்பியார் மதங்கம் (மிருதங்கம்) இசைத் தார். புதுக்கோட்டைத் தட்சிணாமூர்த்தியார் கஞ்சுரா அடித்தார். மதுரை வேணுச் செட்டியார் டோலக்குத் தட்டினார். தில்லைக் கோவிந்தசாமிப் பிள்ளையார் கின்னரி (Fiddle) எழுவினார். மன்னார்குடிப் பக்கிரிசாமிப் பிள்ளையார் குணக்குரல் ஒலித்தார். இன்னிசையரங்கு நள்ளிரவுவரை நடந்தது.

(7) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மாண்டான். சேரன் செங்குட்டுவன் ஆண்டான்.

(8) நான் திருமணத்திற்கு வருவேன். நீ உடன் வரவேண்டும்.

(9) நான் பந்தயத்தில் ஓடுகிறேன். பள்ளிக்குப் பெயர் வருவது என் நோக்கம்.