உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

181

(10) சிறப்பியங்கி (pleasure car) கடு வேகமாக ஓடும். பொது வியங்கி

கடுவேகமாக ஓடாது.

(11) கத்துகிறான். காது வெடிக்கிறது.

(12) ஒருவனுக்கு அருமையுறவினர் சாவு நினைவிற்கு வருகிறது. அழுகை வருகிறது.

வாக்கிய ஒன்றுசேர்ப்பு (தொடர்ச்சி)

பல தனிவாக்கியங்களை ஒரு கதம்ப வாக்கியமாக்கல்: எ-டு : கண் ஒன்றைக் காண்கிறது. காது ஒன்றைக் கேட்கிறது.

கை ஒன்றைத் தேடுகிறது. கருத்து ஒன்றை நாடுகிறது. இந்நிலையில் பூசை எங்ஙனம் நடைபெறும்? இங்ஙனம் பட்டினத்தார் கவல்கின்றார்.

'கண் ஒன்றைக் காண்கிறது; காது ஒன்றைக் கேட்கிறது; கை ஒன்றைத் தேடுகிறது; கருத்து ஒன்றை நாடுகிறது; இந் நிலையில் பூசை எங்ஙனம் நடைபெறும்?" என்று பட்டினத் தார் கவல்கின்றார்.

பயிற்சி

கீழ்வரும் தனிவாக்கியத் தொகுதிகளை, ஒவ்வொரு கதம்ப வாக்கியமாகச் சேர்த்தெழுதுக :

(1) உணவால் உடம்பு வளரும். உடம்பால் உயிர் வளரும். உணவு காடுத்தோர் உயிர் கொடுத்தோர். இதை அறிக.

(2) நீ யார்? உன் பேர் என்ன? சொல்.

(3)

மனைவி மனைமாட்சி யுடையவளா யிருத்தல்வேண்டும். மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியிருத்தல் வேண்டும். ஏவலாளர் ஏவாது செய்ய வேண்டும். அரசன் செங்கோல் செலுத்த வேண்டும். சுற்றுச் சூழலில் அறிஞர் பலர் இருத்தல் வேண்டும். ஒருவனுக்கு வாழ்நாள் நீடிக்கும். அவனுக்கு நரையிராது. இங்ஙனம் பிசிராந்தையார் கூறுகின்றார்.

(4) குட்டுவதற்குப் பிள்ளைப்பாண்டிய னில்லை. காதறுப் பதற்கு வில்லிபுத்தூரரில்லை. முடிவெட்டுவித்தற்கு ஓட்டக் கூத்தரில்லை. அறிவிலிகளும் புலவராய்விட்டனர். இங்ஙனம் படிக்காசுப்புலவர் வருந்துகின்றார்.