உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

செய்வினை

செயப்பாட்டு வினை :

செய்வினை

செயப்பாட்டுவினை :

செய்வினை

செயப்பாட்டுவினை :

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

திரிசிரபுரம் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஒரு நாளைக்கு முந்நூறு பாட்டுப் பாடுவது முண்டு. திரிசிபுரம் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையால், ஒரு நாளைக்கு முந்நூறு பாட்டுப் பாடப்படுவது முண்டு.

பதனீரைச் சென்னையார் பனஞ் சாறென்பர்.

பதனீர் சென்னையாராற் பனஞ்சா றெனப்படும்.

பண்டைக்காலத்தில் தீராப் பெருங் கடன்பட்டவரெல்லாம் பெரும் பாலும் அடிமையராயினர்.

பண்டைக் காலத்தில் தீரா பெருங் கடன் பட்டவரெல்லாம் பெரும் பாலும் அடிமையராக்கப்பட்டனர்.

கீழ்வரும்

பயிற்சி 1

வாக்கியங்களிலுள்ள

செய்வினைகளைச்

செயப்பாட்டு வினையாக மாற்றுக:

(1)

பிரான்சிசு திரேக்கு உலகமுழுதும் சுற்றிவந்தார்.

(2) அச்சுத்தொழில் முதன்முதல் சீனத்தில் தோன்றியது.

(3)

(4)

ஒரு பழஞ் சோழவேந்தன் கரும்பைச் சாலித் தீவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்தான்.

செருமானியரான இராண்டுசென் (ROENTGEN) 1895-ல் உட்காட்டியை (X-ray) கண்டமைத்தார்.

(5) இற்றிலர் HITLER இந்தியாவைக் கைப்பற்றிவிடுவார் என்று இந்தியருள் யார் யார் எதிர்பார்த்தனரோ, அவரெல்லாம் செருமானிய மொழியைக் கற்கத் தொடங்கினர்.

(6) ஆங்கிலேயர் இரசியாவைச் செருமானிய உறவிலிருந்து பிரிப்பதற்கு ஒரு சூழ்ச்சி செய்தனர்.

(7) பொதுவாக, நாட்டாண்மை நகராண்மைத் தேர்தல்கள் மூன்றாண்டிற் கொருமுறை நடைபெறும்.