உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

203

(8) நாட்டுமொழி யிலக்கிய வளர்ச்சியின் பொருட்டு, ஆண்டு தொறும் பற்பல புதிய நூல்கட்குப் பல்கலைக் கழகத்தார் பரிசு வழங்குகின்றனர்.

பயிற்சி 2

கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள செயப்பாட்டு வினைகளைச் செய்வினையாக மாற்றுக :

(1)

இந்தியச் சட்டசபை முதன்முதல் 1853-ல் தோற்று விக்கப்பெற்றது என்னலாம்.

(2) நோபெல் பரிசு, ஆண்டுதோறும், இலக்கியம் பூதநூல் வேதிநூல் மருத்துவம் சமாதானம் ஆகிய ஐந்துறையில் அருந்தொண்டாற்றியவர்க்கு அளிக்கப்பெறும்.

(3)

(4)

(5)

த்தாலி தேசத்து மார்க்கோனியால் கம்பியிலி (Wireless) 1895-ல் புதிதாய்ப் புனையப்பெற்றது.

பண்டைக்காலத்திற் பழிக்குப்பழி வாங்கப்பட்டது. இந்தியா இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது நல்லதன்று. (6) வகுப்புவாரித் திட்டத்தை விலக்கும்பொருட்டுச் சென்னை உயர்நிலைமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதை விலக்குமாறு தீர்ப்பும் கூறப்பட்டுள்ளது.

(7) 1912-ல் இந்தியாவின் ஆங்கில ஆட்சித் தலைமை நிலையம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.

(8) நீ அளக்கிற அளவின்படியே உனக்கு அளக்கப்படும்.

உடன்பாட்டுவினை எதிர்மறைவினைப் பரிமாற்றம் (Interchange of Affirmative and Negative Sentences)

கீழ்வரும் வாக்கிய

ணைகளை ஆய்க :

(1) பேதை தானே தனக்குக் கேடு செய்து கொள்கின்றான். பேதைக்குக் கேடு செய்ய வேறொருவர் வேண்டுவ தில்லை. (2) உலகில் மக்கட் செறிவு மிகுந்த இடம் சாவகம்.

உலகில் சாவகத்தைப்போல் மக்கட் செறிவு மிகுந்த இடம் வேறொன்று மில்லை.

(3) அதிகங் கற்றவரிடத்திலும் அறியாமை யுண்டு.

அதிகங் கற்றவரிடத்திலும் அறியாமை இல்லாமலில்லை. (4) இப் பாட்டின் பொருள் கருகலாயிருக்கின்றது. இப்பாட்டின் பொருள் தெளிவாயில்லை.