உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

209

கூட்டுவாக்கியம் : பாணபத்திரர் பரிசுபெற விரும்பினார்; அதற்காகச் சேரமான் பெருமாள் நாய னாரிடம் சென்றார்.

தனிவாக்கியம்

தலைமையாசிரியர் மாணிக்கம் பிள்ளை

இங்கிலாந்திற்கு

பயிலச்சென்றார்.

மேற்கல்வி

கூட்டுவாக்கியம் : தலைமையாசிரியர் மாணிக்கம் பிள்ளை மேற்கல்வி பயில விரும்பினார்; அதற் காக இங்கிலாந்திற்குச் சென்றார்.

தனிவாக்கியம் : திருநாவுக்கரசர் பரடு தேயக் கயிலைக்கு நடந்தார்.

கூட்டுவாக்கியம் : திருநாவுக்கரசர் கயிலைக்கு நடந்தார்; அதனால் அவருக்குப் பரடு தேய்ந்தது. தனிவாக்கியம் : யானை கொழுத்தால் பாகனுக் கடங்

காது.

கூட்டுவாக்கியம் : யானை

ருசமையம் கொழுக்கும்;

அதன்பின் பாகனுக்கு அடங்காது.

தனிவாக்கியம் : மருதன்

நன்றாய்ப் படித்தும் தேற

வில்லை.

கூட்டுவாக்கியம் : மருதன் நன்றாய்ப் படித்தான்; ஆனாலும்

தனிவாக்கியம் :

தேறவில்லை.

வடமலையன்

சேலங் கல்லூரியிற்

சேர்ந்து கற்றுத்தேறிப் பதவிபெற்று

வாழ்ந்தான்.

கூட்டுவாக்கியம் :

வடமலையன் சேலங்

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

கல்லூரியிற்

சேர்ந்தான், கற்றான், தேறினான், பதவி பெற்றான், வாழ்ந்தான்.

மாணிக்கவாசகர் திருவாதவூரிற் பிறந்து, மதுரையில் அமைச்சராயிருந்து, திருப் பெருந்துறையில்

உலகப் பற்றைத்

துறந்து, தில்லையில் யோக மர்ந்து, சிவபெருமான் திருவடிநீழ லடைந்தார். மாணிக்கவாசகர்

திருவாதவூரிற்

பிறந்தார்; மதுரையில் அமைச்சரா யிருந்தார்;திருப்பெருந்துறையில் உலகப் பற்றைத் துறந்தார்; தில்லையில் யோக மர்ந்தார்; சிவபெருமான் திருவடி நீழலடைந்தார்.