உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

229

(9) கல்லூரித் திறப்புநாளில் வரவுப் பதிவுப் புத்தகத்தில் கையெழுத்து வைத்தால்தான், ஆசிரியர்க்கு விடுமுறைச் சம்பளங் கிடைக்கும்.

(10) மணஞ் செய்யுமுன்பே கல்வி முடிந்துவிடவேண்டும்.

(11) கடவுளுக்கு உருவமில்லை யென்பது சித்த மதம்.

(12) மாட்டிற்கிருக்கிற மதிகூடச் சில மாந்தர்க்கில்லை.

(13) சிறிது சிறிதாய் மேகம் வந்து வானம் முழுவதையும் மறைத்துவிட்டது.

(14) காலில் முள் தைத்திருப்பதால் நடக்கமுடியவில்லை.

(15) ஒருவன் பிறரால் நேசிக்கப்படவேண்டுமாயின், தான் பிறரை நேசிக்கவேண்டும்.

(16) நாம் காண்கின்றவை யெல்லாம் நிலையானவை யல்ல.

(17) இரவில் உண்டது செரிக்குமுன் படுக்கக்கூடாது.

(18) முன்பணம் சென்றால்தான் சரக்கு வரும்.

(19) வண்டி மரத்தில் மோதுவதற்கு ஒரு நொடிக்குமுன் வலவன் (driver) குதித்துவிட்டான்.

(20) அவன் சொன்ன சொல்லை இதுவரை காப்பாற்றினதே யில்லை. (21) ஏமாற்றம் எத்தனை நாள் நடந்தாலும், உண்மை ஒரு காலத்தில் வெளிப்படாமற் போகாது.

(22) கேடுவரு முன்பே மதி கெட்டுவரும்.

(23) நோய் நீங்கவேண்டுமென்று மருந்துண்கிறோம்.

(24) டாக்டர் வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரை, எல்லார்க்கும் விளங்குமாறு எளிய நடையில் எழுதப் பெற்றுள்ளது.

பயிற்சி 2

கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள சார்பு கிளவியங்களைத் தலைமைக் கிளவியமாக மாற்றுக:

(1) சாதுவன் கூறிய அறவுரையைக் கேட்ட நக்கசாரணர் தலைவன் கள்ளுங் கொலையுந் தவிர்ந்தான்.

(2)

படைத்தலைவன் ஏவிய விடமெல்லாம் படை செல்ல வேண்டும்.