உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




230

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(3) நான் கண்ட மாந்தருள் ஒருவனாவது ஏழடிக்குமேல் உயரமாய் இருந்ததில்லை.

(4) அநாகரிக மக்களும் உண்மையுள்ளவர் என்பது, உவாலேசு கண்டறிந்த வுண்மை.

(5) இயந்திரத்தினாற் செய்யப்படும்

பொருள்போன்றே,

கையினாற் செய்யப்படும் பொருளும் உறுதியாயிருக்க முடியும்.

(6) அயலாரெல்லாம் உயர்வானவரென்று கருதுவது தற்காலத் தமிழன் இயல்பு.

(7) காவேரி நீர் வந்தபின்பே, சேலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் நீங்கும்.

(8) பணம் இருக்கும்வரை அதன் அருமை சரியாய்த் தெரியாது. (9) நம் படை வென்றது நமக்குப் பெருமகிழ்ச்சியை விளைக்கின்றது.

(10) பொருளுதவி யில்லாதபோது ஆளுதவியாவது வேண்டும். (11) இந்தியா விடுதலைபெற்ற செய்தி வெளியானவுடன், இந்தியர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

(12) மாணவன் தேர்வெழுதும்போதுதான், காலத்தின் அருமை அவனுக்கு விளங்கும்.

(13) தலைக்கோட்டையில் இராமராயரது தலை கழையில் மாட்டிக் காட்டப்பட்டதுதான், விசயநகரப் படைகள் ன்னதுதான் என்று சொல்ல

மருண்டோடியவகை

முடியாது.

(14) கோயம்புத்தூர்த் திருவாளர் துரைச்சாமி நாயுடு சரியானபடி ஊக்குவிக்கப்பெற்றிருந்தால், இன்று அவரது இயந்திரப் புலமை நுணுக்கத்தை உலகம் கொண்டாடி யிருக்கும்.

(15) ஒரு குடும்பத்தில் பின் பிறக்கும் பிள்ளையே அறிவிற் சிறந்திருக்குமென்பது, உளநூல் கூறும் உண்மை.

(16)ஒருவன்

காடியவனல்லன் என்பது, அவனுடைய வேலைக்காரரை அன்பாய் நடத்தும்வகையில் விளங்கும்.

(17) ஒரு மொழியிற் பற்றுள்ளவர் கல்வியமைச்சரா யிருக்கும் போதே, அம் மொழி மிகுந்த வளர்ச்சியடையும்.

(18) வழக்கறிஞர் திறமையாக வாதாடுவதனாலேயே, பெரும்பாலும் வழக்குகள் வெற்றிபெறுகின்றன.