உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

231

(19) நாவன்மை நினைவாற்றல் ஏரணவறிவு சட்டப்புலமை மதிநுட்பம் முதலியன விருந்தால்தான், ஒருவர் சிறந்த வழக்கறிஞராகமுடியும்.

(20) நாலு படி கறக்கும் மாடொன்று கால்நடை மருத்துவம் செய்யப்படும் சாலையில் உள்ளது.

(27) தமிழ் வழங்காத நாட்டில் அவன் வளர்ந்திருக்கின்றான். (22) படகு மூழ்கும்படி மலைபோல் அலை யெழுந்தது.

(23) நம்பி வரும்போதெல்லாம் நாயும் கூடவரும்.

(24) கோடைமழை பெய்யும்போது மரத்தடியில் நிற்கக் கூடாது. 17. நேர்கூற்று, நேரல் கூற்று

(Direct and Indirect Speech)

ஒருவர் கூற்றை, அவர் கூறியபடியே ஒரு சொல்லையும் மாற்றாது தன்மையிடத்திற்கேற்பக் கூறுவது, நேர்கூற்று ஆகும்; அதைப் பொருள் மாற்றாது ஆங்காங்கு சொன்மாற்றிப் படர்க்கையிடத்திற்கேற்பக் கூறுவது, நேரல் கூற்று ஆகும். நேராகக் கூறப்படுவது நேர்கூற்று; நேரல்லாமற் கூறப்படுவது நேரல்கூற்று. இவை, முறையே, தற்கூற்று, அயற்கூற்று எனவும் படும்.

தமிழில், நேர்கூற்றே நேரல்கூற்றினும் பெருவழக்காய் வழங்குவது. ஆகையால், நேர்கூற்று முறையையே, நேரல்கூற்று முறையை அறியாத மாணவரெல்லாம் தழுவ வேண்டும்.

6

6

நேர்கூற்று, என்றான்', என்று சொன்னான்',

சொன்னான்' என்னும் முறைபற்றிய

6

எனச்

சொற்றொடர்களுள்

ஒன்றாலும்; நேரல் கூற்று, 'ஆகச்சொன்னான்',

6

என்பதாகச்

சொன்னான் என்று சொன்னான்’ என்னும் முறைபற்றிய சொற்றொடர்களுள் ஒன்றாலும் முடிக்கப்பெறும்.

எ-டு : அவன் “நான் வருவேன்” என்றான்.

அவன் தான் வருவதாகச் சொன்னான்.

- நேர்கூற்று

- நேரல் கூற்று வந்தால், அவரிட

“நீ நாளை மண வழகனார் வீட்டிற்கு மிருந்து உனக் கொரு புத்தகம் வாங்கித் தருகின்றேன்” என்று, இளவழகனார் என்னிடம் சொன்னார். - நேர்கூற்று நான் மறுநாள் மணவழகனார் வீட்டிற்குச் சென்றால், அவரிடமிருந்து எனக்கொரு புத்தகம் வாங்கித் தருவதாக, இளவழகனார் என்னிடம் சொன்னார். நேரல்கூற்று

-