உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




232

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

“எனது நாட்டார் பெரும்பாலும் அறியாமையுள்ளவர் களா யிருப்பதால், அவர்க்கு அறிவுபுகட்டுவான் வேண்டி, கடந்த நாற்பதாண்டுகளாக, யான் அரும்பாடுபட்டுப் பல்கலைகளும் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் நூலியற்றவும் வேண்டியதாயிற்று,” என்று மறைமலையடிகள் கூறுகின்றார்.

நேர்கூற்று

தமது நாட்டார் பெரும்பாலும் அறியாமையுள்ளவர் களா யிருப்பதால், அவர்க்கு அறிவுபுகட்டுவான் வேண்டி, கடந்த நாற்பதாண்டுகளாக, தாம் அரும்பாடு பட்டுப் பல்கலைகளும் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் நூலியற்றவும் வேண்டியதாயிற்றென்று, மறைமலையடிகள் கூறுகின்றார். -நேரல்கூற்று

தமிழில், சில கூற்றுகள் அல்லது வாக்கியங்கள், நேர் கூற்றிலும் நேரல்கூற்றிலும் ஒரே வடிவாயிருக்கும்.

எ-டு: "இறைவன் திருவடிகளை யடைந்தவர்க்கே, பிறவிக் கடலை நீந்துதல் கூடும்" என்கின்றார் வள்ளுவர்.

- நேர்கூற்று

இறைவன் திருவடிகளை யடைந்தவர்க்கே, பிறவிக் கடலை நீந்துதல்கூடும், என்கின்றார் (என்பதாகக் கூறுகின்றார்) வள்ளுவர்.

நேரல்கூற்று

நேர்கூற்று நேரல்கூற்றாக மாறும்போது, சில சொற்கள் பின் வருமாறு மாறும் அல்லது மாறாதிருக்கும் :

(1) மூவிடப் பதிற்பெயர்கள்

நேர்கூற்று

நான்

என்

நேரல்கூற்று

தான்

நீ

உன்

அவன்

தன், அவன்றன்

நான், அவன், இவன்

நீ, அவன், இவன்

என், தன், அவன்றன், இவன்றன்

அவன்றன்

உன், அவன்றன், இவன்றன்

இவன்

நீ, அவன், இவன்

வன்றன்

உன், அவன்றன், இவன்றன்

எ-டு : “நான் ஆனி மாதம் வருவேன். எனக்குப் புத்தகம்

வாங்கிவை" என்று வேலன் சொன்னான்.

- நேர்கூற்று