உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




234

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

"அவன் நல்லவன்”, என்று ஐயப்பன் அவனைப்பற்றிச் சொன்னான்.

- நேர்கூற்று

அவன் நல்லவன் என்பதாக ஐயப்பன் அவனைப்பற்றிச் சொன்னான் - நேரல்கூற்று

“அவன் தன் பெயரைச் சொல்லவில்லை”, என்று மாடலன் உன்னைப்பற்றிக் குறைகூறினான்.

- நேர்கூற்று

நீ உன் பெயரைச் சொல்லவில்லை யென்பதாக, மாடலன் உன்னைப்பற்றிக் குறைகூறினான்

- நேரல்கூற்று

“இவன் ஏன் வரவில்லை”, என்று பொன்னன் உன்னைப் பற்றிக் கேட்டான்.

-

- நேர்கூற்று

நீ ஏன் வரவில்லை என்று பொன்னன் உன்னைப்பற்றிக் கேட்டான்.

- நேரல்கூற்று

"இவன் ஏன் வரவில்லை”, என்று பொன்னன் அவனைப் பற்றிக் கேட்டான்.

- நேர்கூற்று

அவன் ஏன் வரவில்லை யென்று பொன்னன் அவனைப் பற்றிக் கேட்டான்.

- நேரல்கூற்று

"இவன் தன் வேலையை விட்டுவிட்டான்”, என்று மழவன் உன்னைப்பற்றிச் சொன்னான்.

"

-

- நேர்கூற்று

நீ உன் வேலையை விட்டுவிட்டதாக, மழவன் உன்னைப் பற்றிச் சொன்னான்.

- நேரல்கூற்று

(2) அண்மைச் சுட்டுச் சொற்கள்

நேர்கூற்று

நேரல்கூற்று

இந்த

அந்த

வன்

அவன்

இங்கு

அங்கு

ன்று

அன்று

ஈண்டு

ஆண்டு

எ-டு : “இவ்விடத்தில் தண்ணீர் கிடைப்பதருமை”, என்று

முத்தையன் சொன்னான்.

-

- நேர்கூற்று

- நேரல்கூற்று

அவ்விடத்தில் தண்ணீர் கிடைப்பதருமை யென்பதாக முத்தையன் சொன்னான்.